இவையே
மூல இலக்கியமாகத் திகழ்வது என்பதைச் சேக்கிழார்
இருபாடல்களால் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது.
மூன்றாந்
திருமுறையில், இவ்வியாப்புவகைத் திருப்பதிகங்கள் பலவும்
சீகாழிப் பெருமானைப் பற்றியனவாகவே அமைந்துள்ளன.
அஞ்செழுத்துப்
பதிகம்:
ஞானசம்பந்தருக்கு
உபநயன காலத்தில் வேதம் ஓதும் உரிமை
தந்தோம் என்ற அந்தணர்கட்கு, வேதத்தில் முக்கியமாயுள்ள அஞ்செழுத்தின்
சிறப்பை ஞானசம்பந்தர் எடுத்தோதினார். அத்திருப்பதிகம், துஞ்சலும்
துஞ்சலிலாத போழ்தினும் (தி.3.ப.22.பா.1) என்பது.
சோதியில்
கலக்கும்போது நிறைவாக ஓதிய, நமச்சிவாயத்
திருப்பதிகமாகிய, காதலாகிக் கசிந்து என்பதாகும். இதில் வேதம்
நான்கினும் மெய்ப்பொருள் நாதன் நாமம் நமச்சிவாயவே (தி.3.ப.40.பா.1)-
என்று ஓதி நிறைவு செய்கின்றார்.
தேவாரம்
அருளிய மூவருமே, தூலபஞ்சாக்கரமாகிய நமச்சிவாயத்
திருப்பதிகம் ஒவ்வொன்றருளியுள்ளனர். ஞானசம்பந்தர், தூலசூக்கும,
அதிசூக்கும பஞ்சாக்கரங்களை உள்ளடக்கித் தொகுப்பாக அஞ்செழுத்தின்
பெருமையை உணர்ந்த துஞ்சலும் துஞ்சல் என்ற பதிகம் அருளியுள்ளார்.
முதலில்
ஓதிய இத்திருப்பதிகத்திலும், இறுதியில் ஓதிய காதலாகி
என்னும் பதிகத்திலும் முதல் பாடல்களில் ஓதும் முறையை அறிவித்துள்ளார்.
நெஞ்சகம் நைந்து நினைமின் நினைத்தால் வாழ்வில் வரும் கூற்றம்
முதலிய இடர்களை அகற்றலாம்-என்கிறது முதல் பதிகம். அதையே
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
என்று சொல்கிறது, நிறைவுப் பதிகம்.
அவரவர்
தகுதிக்கேற்ப தூலசூக்கும பஞ்சாக்கரத்தை எல்லோரும் ஓதி
உய்யலாம் என்கின்றன இவ்விரு பதிகங்களும்.
வாழ்க
அந்தணர்:
சைவநெறியே
மெய்ந்நெறியென்று நிலைநாட்டிய திருப்பாசுரம்
எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகம்,
|