பக்கம் எண் :

22ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை 

இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

     நல்லவர்களால்தான் நாடு வாழ்கின்றது. இதனை அவ்வையார்,
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”
என்றார். திருவள்ளுவரும், “பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதின்றேல்
மண்புக்கு மாய்வது மன்” என்றார். நல்லோரைப் பண்புடையார் என்றார்
வள்ளுவர்

.      நல்லவர்களை, பண்பாளர்களை, சான்றோர் என்று பேசுகிறது
புறநானூறு. “யாண்டு பலவாக நரையில வாகுதல்” எப்படி சாத்தியமாயிற்று,
என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடையாக அதே பாடலின் நிறைவில்,
“ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”
என்று தெளிவுபடுத்துகிறார்.

     எனவே, அரைகுறையான, வளர்ச்சியடையாத மக்களும், பிற
உயிரினங்களும் வாழ்வாங்கு வாழவேண்டுமானால், நல்லவர்கள் அந்த
நாட்டில் வாழவேண்டும்.

     இது குறித்தே மற்றொரு புறநானூற்றுப் புலவரும் “எவ்வழி நல்லவர்
ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” எனக் கூறிப்போந்தார்.

     இவ்வரிய கருத்தை ஒட்டியே ஞானசம்பந்தர், சைவ நெறியை
நிலைநிறுத்தப் பாடியருளிய, “வாழ்க அந்தணர்” என்ற பதிகத்தில், உலகம்
வாழவேண்டுமானால், மூவர் முதலில் வாழ வேண்டும், என்று அருளினார்.
அம்மூவரார், அந்தணர், வானவர், ஆனினம் என்பர். ஆம். பிற
உயிர்களிடத்துச் செந்தண்மை பூண்ட அந்தணர்களால் சாதாரண மக்களும்
நல்லவர்கள் ஆகின்றனர். இதனால் அந்தணர்கள் முதலில் வாழவேண்டும்.

     இவர்கள் பூசுரர் எனப் பெயர் பெறுவர். சுரர் என்றால் தேவர்
எனப்பெறுவர். இவர்களை நல்லவர்கள் என்பர். அசுரர் என்றார் நல்லவர்கள்
அல்லாதவர்கள். அசுரர்களே வல்லவர்கள், திறமை மிக்கவர்கள். ஆனால்
பிற உயிர்களுக்கு பெரும்பாலும் தீங்கு செய்பவர்கள். இக்கருத்தை
அருணகிரிநாதர் ஒராற்றால் குறிப்பிடுவது காண்க. “வல் அசுரர் மாள நல்ல
சுரர் வாழ வல்லை வடிவேலைத் தொடுவோனே” என்பது அவர் வாக்கு.

     அந்தணர்களைப் பூசரர் என்பார்கள். பூ-பூமியில்