அகச்சான்று:
மண்ணில்
நல்ல வண்ணம் வாழலாம் என்ற மங்கலத்
திருப்பதிகத்தில் இரண்டாம் பாடலில் தமக்கு அம்மையப்பர் ஞானப்பால்
கொடுத்தாண்டமையை அகச்சான்றாகக் காட்டிப் பாடியுள்ளமை அறிந்து
இன்புறத்தக்கது.
போதையார்
பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனையாண்டவன்......
(தி.3
ப.24 பா.2) |
என்பது அப்பாடற்பகுதி.
தவநெறி
சித்திப்பதற்கு இயலிசை எனும் பொருளின் திறமாம் என்ற
திருப்பதிகம் ஓதியும், பொருள் சித்திப்பதற்கு இடரினும் தளரினும்
(தி.3 ப.4 பா.1) என்னும் திருப்பதிகத்தை ஓதியும் பயன்பெறலாம்.
பயனடைந்தோர் பலராவர்.
சுந்தரரும்,
திருத்துறையூரில், மலையார் அருவி எனத் தொடங்கும்
பதிகத்தின் 11 பாடல்களிலும் தவநெறி வேண்டுவதை ஏழாந் திருமுறையில்
இனிதே காணலாம்.
அச்சக்
குறிப்பு:
திருவாரூர்த்
தலத்திற்குச் செல்லும்போது தேவார மூவரும் தம்மையும்
ஆரூர் இறைவன் ஆள்வரோ? ஏற்பரோ? என்று அச்சத்துடன் அணுகினர்,
என்ற குறிப்பு மூவர் பாடல்களிலும் காணக்கிடக்கின்றன.
தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியம், நமக்கும் உண்டு
கொலோ? என்கிறார் அப்பர்.
இறைவன்
இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்
என்பது சுந்தரர் வாக்கு.
அந்தமாய்
உலகாதியும் ஆயினான் என்று தொடங்கும் பதிகத்தில்,
எந்தைதான் எனை ஏன்றுகொளும் கொலோ? என்கிறார் சம்பந்தர். எனவே,
அச்சுக் குறிப்பு மூவர் பாடலிலும் காண்கிறோம். அன்பு முதிர்ந்துள்ளமையால்
இவ்வச்சம் அவர்களுக்கு
|