பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை25

இருந்துள்ளது. அச்சமும், அன்பும் கொண்டு வணங்கி வழிபடுவதே சிறந்த
வழிபாடாகும்.

வரலாற்றுக் குறிப்பு:

     சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது முத்தாரம் காவிரியில்
நழுவிப்போக, அஃது இறைவனுக்கு ஆகட்டும் என்றான். அஃது அவ்வாறே
மறுநாள் சுவாமிக்குத் திருமஞ்சனம் எடுக்கும் குடத்தில் புகுந்து இறைவனுக்கு
அபிஷேகம் செய்யும்போது இறைவன் திருவுருவிற்கு அணியாரமாயிற்று
என்பது வரலாறு. இதனைச் சுந்தரர்,

தாரமாகிய பொன்னித் தண்துறையாடி விழுத்தும்
நீரில் நின்றபடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரம்கொண்ட எம்மானைக் காவுடை ஆதியை... ...

                                  (தி.7 ப. 76 பா 7)

என்று குறிப்பிடுகிறார்.

     இதனையே அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் தோன்றிய
ஞானசம்பந்தர், இத்திருமுறையில் “வானைக்காவில் வெண்மதி” என்ற
பதிகத்தின் (தி.3 ப. 53 பா 1) திருப்பாடலில், “ஆரம்நீரோடேந்தினான்
ஆனைக்காவு சேர்மினே” என்றருளிச் செய்துள்ளார்.

ஆகுதிப் புகையின் ஆக்கம்:

     புகழ்மிக்க வேதியர்கள் செய்யும் வேள்விப்புகை வானளவு
உயர்ந்துள்ள சோலைமீது மேகம்போல் மூடியுள்ளது என்கிறார்
ஞானசம்பந்தர். இது மயிலாடுதுறை அந்தணர்களின் வேள்விச் செயல்.
இதுகுறித்த பாடல் காண்க:

.............
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது
     புகை போகி அழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட
     மூசு மயிலாடுதுறையே

                             (தி.3 ப. 70 பா.1)

     ஓமப்புகையால் மழை பொழியும் நிலையை ஓமாம்புலியூர்த்