தேவாரத்தில் இரண்டாம்
பாடலில் காட்டியுள்ளார். அப்பாடற்பகுதி காண்க: .
............
அம்பரமாகி அழல்உமிழ்புகையின்
ஆகுதியால் மழைபொழியும்
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர்
உடையவர் வடதளி அதுவே
(தி.3
ப. 122 பா.2) |
மேலும்,
அவ்வூர் அந்தணர்கள் ஆகவநீயம், காருகபத்தியம்,
தக்ஷிணாக்கினியம் எனும் முத்தீயும் வளர்த்தனர் என்று ஒரு பாடலால்
அறிவிக்கின்றார்.
அது
வருமாறு:
ஆங்கெரிமூன்றும்
அமர்ந்துடன் இருந்த, அங்கையால் ஆகுதி
வேட்கும், ஓங்கிய மறையோர் (தி.3ப.122 பா.3)
அவ்வெரிஓம்புதலால்
நாட்டில் காலத்தில் மழை பொழிந்து கலி
என்னும் வறுமை வாராது நீங்குகிறது.
இக்கருத்தை
முன்பே, முதல் திருமுறையில் ஞானசம்பந்தர்
அருளியுள்ளார். தில்லைவாழ் அந்தணர்கள் கற்றாங்கு எரிஓம்பிக் கலியை
வாராமே செற்றவர்கள் என்பதே அக்குறிப்புள்ள பாடல் பகுதி.
மேலும்,
அப்பரும் திருப்பழனத் தேவாரத்தில் அஞ்சிப் போய்க்
கலிமெலிய அழலோம்பும் அப்பூதி என்று சிறப்பித்து உள்ளமை காணலாம்.
சுந்தரரும் கலிவலங்கெட ஆரழலோம்பும் கற்ற நற்றவர் முற்றனலோம்பும்
என்று அழலொம்பும் சிறப்பை அருளியுள்ளார்.
ஓமப்புகையால்
ஆயுள் நீள்கிறது. ஈமப்புகையால் ஆயுள் குறைகிறது
என்கிறது வடமொழி நீதி நூல். வேள்வியினால் வீடும் நாடும் நலம்பெறுவதை
அறிகிறோம். வேத வனச் சிறப்பு: ஊர் எனப்படுவது உயர்ந்தோர்,
தாழ்ந்தோர், இடைநிலைப் பட்டோர் முதலிய பல்லோரும் வாழ்வதேயாகும்.
உயர்ந்தோர், தாழ்ந்தோர், நிலைகுறித்து ஓல்லும் வகையெல்லாம்
அறவினை
|