பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை27

ஓவாதே, செல்லும் வாயெல்லாம்” செயவேண்டும் என்பது நியதி. இதனை,
வேதாரணியம் தேவாரத்தில் குறிப்பிடுகிறார் ஞானசம்பந்தர். “பலதுயர்,
கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து” என்பது அப்பகுதி.
மேலும் அதே பாடலில் “புலவாணர் வறுமை விடுத்தலை மதித்து நிதி
நல்குமவர் மல்குபதி வேதவனமே” (தி3.ப.76.பா.8) என வேதாரணிய மக்கட்
சிறப்பை விதந்தோதியுள்ளார்.

கோகர்ணக் காட்சி

     ஞானசம்பந்தர், திருக்கோகர்ணம் செல்கிறார். அங்கு ஆலயத்தில்
பெருமான் திருமுன்னர் அடியவர்கள் பலரும் நின்று வழிபடுகின்றனர்.
அவர்கள் ஒருமைப்பாட்டு உணர்வுடன் கூடி வழிபாடு நிகழ்த்தினர். அந்த
அழகார்ந்த காட்சியை எடுத்துக்கூறி நம்மையும் அவ்வழியில்
ஆற்றுப்டுத்துகிறார். அப்பாடல் பகுதி காண்க:

.............
ஒன்றியம னத்தடியர் கூடிஇமை யோர்பரவு நீடரவமார்
குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர்
கோகரணமே

                                  (தி.3ப.79.பா.1)

வழிபாடு வல்வினை தீர்க்கும்:

     வினை எனபது செயல். கைவினைப்பொருள்-கையால் செய்யப்பட்ட
பொருள் என்பதால் இதனை நன்கறியலாம், எனவே நல்வினை செய்தால்
இன்பம் பெறலாம். தீவினை செய்தால் துன்பம் பெறலாம்.
தீவினையாளர்களும் இறைவனை வழிபட்டால் தீவினையைக் குனைத்து
மெலிவடையச் செய்யலாம் என்கிறது தேவாரம்.

     வினை மூவகைப்படும். முன்னாள் சேர்த்துவைத்துள்ள வினை, சஞ்சித
வினை எனப்படும். அம்முதலில் சிறிது எடுத்துக்கொண்டு வந்திருப்பதுதான்
இப்பிறவி. இப்போது அதனை அநுபவித்தே தீர்க்க வேண்டும். இதுதான்
பிராரத்தவினை எனப்படுவது. அநுபவிக்கும்போதே மேலும் சில
வினைகளைச் செய்கிறோம். அதுதான் எதிர்காலத்திற்குச் சேமிக்கப்படும்
வினை. இதனை ஆகாமியம் என்பர்.