பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை29

பரவக் கெடும் வல்வினை பாரிடம் சூழ
இரவிற் புறங் காட்டிடை நின்றெரி ஆடி
அரவச் சடை அந்தணன் மேய அழகார்
குரவப் பொழில் சூழ்குரங் காடு துறையே

                        (தி.2ப.35 பா.1)

கற்றறிந்தோர் கடன்:

     உயிர்கள் உய்வதற்கு, தனு-உடம்பு, கரணம்-மனம் முதலிய
அந்தக்கரணங்களும் கண், காது முதலிய 36 தத்துவக் கருவிகளும்,
புவனம்-உலகங்களும், போகம்-இன்ப துன்ப அநுபவங்களும். கருணையினால்
கொடுத்து வளர்ப்பவன் கருணாநிதியாகிய இறைவன் ஒருவனே. இக்கருத்தை
நினைத்தால் ஒவ்வொருவரும் நன்றிக்கடனாக இறைவனை வழிபடக்
கடமைப்பட்டவர் என்பதை உணரலாம்.

     வழிபாடு இறைவன் உயர்வதற்கன்று. வழிபடுவதால் அதன் பயனாக
நாம் உயர்கின்றோம். பள்ளிக்குச் சென்று முறையாகப் படிப்பதால் படிப்பவன்
உயர்கின்றான். இதனை யார் உணர்வார்கள்? கற்றவர்கள்தான் உணர்வார்கள்.
இதனை, திருஞானசம்பந்தர் இத்திருமுறையில் திருநெல்வெண்ணெய்ப் பதிக
ஆறாம் பாடலிற் குறிப்பிடுகின்றார்.

நெற்றியோர் கண்ணுடை நெல்வெண்ணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுதலீரே
பெற்றிகொள் பிறைநுதலீர் உமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தம் கடனே 

                           (தி.3 ப. 96 பா. 6)


அரசராகலாம்

     அரசு என்பது ஆட்சிபுரிதல். அது எல்லோர்க்கும் வாய்ப்பதன்று.
சிலருக்கே வாய்ப்பது. பல்லூழிகாலம் பயின்றால் நல்லாட்சி நடத்தும் தகுதி
நமக்கும் வாய்க்கும். இறைவழிபாட்டால் அவரவர் தகுதிக்கேற்பப் பலன்
கிடைக்கவே செய்யும்.

     நமது உழைப்பிற்கும் தகுதிக்கும் ஏற்பவே நமது வேண்டுகோளும்
அமைந்தால் அவரவர் விரும்பிய பலனைப் பெற்றிடுவர். முதுகுன்றத்து
இறைவனைப் பரவி வழிபடுபவர் உலகில்