பாதிமாதுடனாய
பரமனே:
சிவம்
சக்தி என்ற இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கம் போல
ஒரே பொருள்தான். தன்மையால் இரண்டாகக் கொள்ளப் பெறும்.
வேதவேள்வி என்னும் இப்பாடலில் பாதிமாதுஉடனாய பரமனே என்று
அருளியுள்ளார். இதன் பொருள் ஒரு பாதி அம்மை, ஒரு பாதி அப்பன்
என்பதே, அதிலும் பாதிமாது உடனாகிய பரமனே என்றுள்ளது.
இருதன்மையில் முதன்மையானது சிவமே என்பதைத் தெரிவிக்கின்றார்.
பரம்-மேலானது என்ற சொல்லால் இக்கருத்து இனிது புலனாகிறது.
இதே
கருத்தை மணிவாசகரும் திருவாசகத்தில், சோதியே சுடரே
சூழொளி விளக்கே சுரிகுழல் பணைமுலை மடந்தை பாதியே என்றவர்,
அடுத்துப் பரனே என்றருளி, பரம் சிவமே என்ற அக்கருத்தை வலியுறுத்தி
உள்ளார்.
உலகிலும்
ஆண் பெண் என்ற அமைப்பில் உடற் கூறுவகையால்
வேறுபாடு உண்மை அறிந்தும், முதன்மை யாருக்கு என்பதில்
உடன்பாடில்லாதவராகின்றனர். ஞானசம்பந்தர் தேவாரமும், மணிவாசகரின்
திருவாசகமும் பாதியாயினும் பரம் சிவத்திற்கே என்பதைத் தெளிவுறுத்துகிறது.
இது சரிதானா
என்பதில் ஐயப்பாடுள்ளோர், வித்து-உயிர் யாரிடம்
உள்ளது என்பதைச் சிந்தித்தால் ஐயம் அகன்றுவிடும்.
இதைத் தெளிவு செய்ய சில உதாரணங்களைக் காணலாம்.
நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?
உயிருக்கு உடல் ஆதாரமா, உடலுக்கு உயிர் ஆதாரமா?
மரத்திற்கு இலை ஆதாரமா? இலைக்கு மரம் ஆதாரமா?
இப்படியே பல உதாரணங்களைப் பார்த்துக்கொண்டே போகலாம்.
ஆனால் முன்கண்ட உதாரணங்களில் ஒன்றுக்கு ஒன்று ஆதாரம் என்பதில்
மறுப்பில்லை. எது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் என்பதில்தான் உண்மை
காணவேண்டியுள்ளது. நெய்யை வைத்துத்தான் தொன்னையை மதிக்கிறோம்.
உயிரை வைத்துத்தான்
|