பக்கம் எண் :

34ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை 

உடலை மதிக்கிறோம். இலையினால் மரம் வளர்ந்தாலும் இலைக்கு மூலம்
மரமே என்பதை உணர்கிறபோது மரத்தையே மதிக்கிறோம்.

     ஒருபாதி சிவம்-ஆண், ஒரு பாதி சக்தி-பெண் என்றாலும் அதில்
சிறப்புடையது சிவம் என்றாகிறது. இக்கருத்தைச் சிந்தித்துத் தெளிக. உலகில்
சமநிலையில் ஒருபொருளும் இல்லை என்பதும், ஏற்றத் தாழ்வில்தான் வாழ்வு
சிறக்கிறது என்பதும் சிந்திக்கத்தக்கது.

தாயினும் நல்ல தலைவர்:

     தாய்தான் கருணையின் இருப்பிடம், அக்கருணையை உடையவரே
சிவபெருமான். எனவே கருணை வேறு சிவம் வேறு இல்லை. ஆகவே
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார்கள் திரிகோணமலைப்
பெருமானைப் போற்றுகின்றனர். அவர்களுடைய வாயிலும், மனத்திலும்
பொருந்தி வாழ்கிறார் அப்பெருமான். இதனை அப்பர், “வாயானை
மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை, கருத்தறிந்து முடிப்பான்
தன்னை” என்றருளியுள்ளார். ஞானசம்பந்தர், திரிகோணமாமலைப்
பெருமானைப் பாடியுள்ள பகுதியைக் காண்க.

தாயினும் நல்ல தலைவர்என் றடியார்
     தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும்
மருவிநின் றகலா
     மாண்பினர்.......

                           (தி.3 ப. 123 பா.5)

     வாயுதேவனுக்கும், நாகராசனுக்கும் ஏற்பட்ட வலிமைப் போட்டியால்
கயிலையினின்றும் பிரிந்த மலைகளே திரிகாளத்தி மலை, திரிசிரா மலை,
திரிகோண மலை என்பனவாம். இவை கயிலைமலை போலவே மூன்று
பகுதிகளாக விளங்குவதால் இப்பெயர்களைப் பெற்றன.

உறுநோய் அடையா:

     நாம் நாள்தோறும் நலமாக வாழக் கடவுள் வழிபாடு மிக மிக
இன்றியமையாதது. நமது வாழ்விற்கு முதலாகிய பொருளே சிவம்தான்.
அதனை மறந்தால் நமக்கு வாழ்வேது?

     பரம்பொருளை நினைத்து உருகி வழிபடுவோமானால்