நோய் நம்மை அணுகாது.
இதனை ஞானசம்பந்தர் முதல் திருமுறையில்
அண்ணாமலைப் பதிகத்தில், பெருகும் புனல் அண்ணாமலை என்ற
பாடலில் அருளியுள்ளார்.
............
கருகும் மிடறுடையார் கமழ்சடையார் கழல்பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே
(தி.1ப.10பா.6) |
என்பது அப்பாடற்பகுதி.
மேலும் இம்மூன்றாந் திருமுறையில் வலஞ்சுழிப்
பதிகப் பாடல் ஒன்றில், பழம்பஞ்சுரப் பண்ணில்
.............
வள்ளல் வலஞ்சுழி வாணன் என்று மருவி நினைந்தேத்தி
உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே
(தி.3ப.106பா.1) |
என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
மன
இறுக்கம் நோயைத் தோற்றுவிக்கும். மன உருக்கம் நோயைத்
தீர்த்து வைக்கும். மன உருக்கம் கண்ணீர்ப் பெருக்கிற்குக் காரணமாகும்.
கண்ணீர்ப் பெருக்கினால் நோய் வலி குன்றும்.
சிறு
குழந்தைகள் அடிக்கடி யாகு காரணத்தாலோ அழுது கண்ணீர்
வடிக்கின்றனர். அதனால் அவர்களை நோய் அணுகுவதில்லை.
பெண்களும்
அடிக்கடி அழுவதால் மன இறுக்கம் இன்றியும். நோய்
இன்றியும் வாழ்கின்றார்
வயது
வந்த ஆடவர்கள் இறைவனின் பேருதவியை நினைந்து
உருகவேண்டும். உருகி வழிபடுவோர் நோயின்றி வாழ்கின்றனர். உருகாதார்
நோய்வாய்ப்படுகின்றனர். இது ஒரு மருத்துவ ஆய்வு.
பொருள்
ஈட்டுவோர்க்கு:
நல்லவழியில்
பொருளை ஈட்டி நல்லவழியில் செலவு செய்தலே அறம்
எனப்படும். இதனை ஒளவைப் பிராட்டியார், ஈதல் அறம், தீவினை விட்டு
ஈட்டல் பொருள் என்றார் திருவள்ளுவரோ,
|