பக்கம் எண் :

408திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2818. காரு லாவிய வார்குழ லாள்கயற்
       கண்ணி னாள்புயற் காலொளி மின்னிடை
வாரு லாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய்
நீரு லாவிய சென்னி யன்மன்னி
     நிகரும் நாமமுந் நான்கு நிகழ்பதி
போரு லாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் போற்றுதுமே. 7

2819. காசை சேர்குழ லாள்கயல் ஏர்தடங்
       கண்ணி காம்பன தோள்கதிர் மென்முலைத்
தேசு சேர்மலை மாதம ருந்திரு மார்பகலத்
பெயராய்ப் பிறையையுணர்த்தலும் காண்க.


     7, பொ-ரை: கார்மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலையும்,
கயல்மீன் போன்ற கண்களையும், மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற
இடையையும், கச்சணிந்த மென்மையான கொங்கைகளையும் உடைய
மலைமகளான உமாதேவியோடு, கங்கையைத் தாங்கிய முடியையுடைய
சிவபெருமான் நிலை பெற்றிருக்கும் பதி, பன்னிரு திருப்பெயர்கள் கொண்டு
தனக்குத்தானே ஒப்பாக விளங்கும் பெருமை மிகுந்த, போர்க்கருவிகள்
பொருத்தப்பட்ட மதில்கள் சூழ்ந்த, சோலைகள் நிறைந்த திருப்பூந்தராய்.
அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!

     கு-ரை: கார்-மேகம், உலாவிய-போன்ற (உவம வாசகம்) புயல்கால்
மின்இடை-முகில் வெளிவிடும் மின்னல் போலும் இடை “அல்வழியெல்லாம்
உறழெனமொழிப” என்ற தொல்காப்பிய (எழுத்து. சூ-ம்368) விதிப்படி
புயல்+கால்=புயற்கால் என்றாயிற்று. நிகரும்-தமக்குத் தாமேயிணையான,
நாமம் முந்நான்கும்-பன்னிரண்டு திருப்பெயர்களும், நிகழ்-(திருப்பிரமபுரம்,
முதலாக ... திருக்கழுமலம் ஈறாக முறைப்படி) வழங்கப்படுகிற. போர்-போர்ப்
பொறிகள். உலா-உலவுகின்ற. எயில்-மதில். மதிலில் அமைக்கப்பட்ட
பொறிகள் பகைவர் வருவரேல் அவர்களையழித்தற்கு அங்கு மிங்கும்
திரிவனவாக இருக்கும். போர்ப்பொறிகளைப் போர் என்றது காரிய
ஆகுபெயர்.

     8. பொ-ரை: காயாம்பூப் போன்ற கருநிறமுடைய கூந்தலையும்,
கயல்மீன் போன்ற அழகிய அகன்ற கண்களையும், மூங்கில் போன்ற
தோள்களையும், கதிர்வீசும் மென்மை வாய்ந்த கொங்கைகளையும்,