2899.
|
வேதியர்
கைதொழு வீழி மிழலைவி ரும்பிய |
|
ஆதியை
வாழ்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்ஆய்ந்
தோதிய வொண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே. 11 |
திருச்சிற்றம்பலம்
(பெரிய 1973.) வெறு
அரையார்-ஆடையில்லாதவர்; திகம்பரர்.
வெற்றுச்சொல். தெரியா-சொல்லால் அறியப்படாத சொல்லுக்கு அப்பாற்பட்ட
பொருளாகிய ஒளிக்கு அப்பால் நின்ற. சொல்லும் பொருளும் இறந்த சுடர்
என்றபடி (திருவாசகம்) சோதிதான்-பேரொளிப்பிழம்பானது. மற்று
அறியா-பரமே கண்டு, பதார்த்தங்கள் பாராத. அடியார்கள் தம் சிந்தையுள்
மன்னும் திருவீழிமிழலையாராகிய சோதி, சொல்லையும் பொருளையும்
கடந்து நின்றதாயினும் அடியார் சிந்தையுள் மன்னும்.
11. பொ-ரை:அந்தணர்கள்
கைகூப்பித் தொழுது போற்றும்
திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக்கும் இறைவனை, சோலைகள்
விளங்கும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் ஆராய்ந்து ஓதிய
ஒண்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் கூறிப் போற்றி வழிபடுபவர்கள்
உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் மலர் போன்ற
திருவடிகளைச் சேர்ந்து முக்திப் பேற்றினைப் பெறுவர்.
கு-ரை:வேதியர்
கைதொழும் திருவீழிமிழலையாரை ஞானசம்பந்தன்
ஆய்ந்து பாடிய ஒண்தமிழ் பத்தும் வல்லவர் அம்மாது பொருந்திய பாகனது
மலர்போன்ற அடியைச் சேரவும் வல்லராவார்.
திருஞானசம்பந்தர்
புராணம்
|
|
வந்து திருவீழி
மிழலை மறைவல்ல
அந்தணர்கள் போற்றிசைப்பத் தாமும் மணிமுத்தின்
சந்த மணிச்சிவிகை நின்றிழிந்து தாழ்ந்தருளி
உய்ந்த மறையோ ருடனணைந்தங் குள்புகுவார். |
-சேக்கிழார்.
|
|