பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)11. திருப்புனவாயில்483

2920. பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன
       வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற்
     காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ்
     நன்மையால்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லார்அருள்
     சேர்வரே.                        11

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: பொன் வளையலணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக்
கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்புனவாயில் என்னும்
தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள் தொழுது போற்றுமாறு கடல்
வளமிக்க சீகாழியில் அவதரித்த நற்றமிழ் ஞான சம்பந்தன் அருளிய
குற்றமில்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள்
இறையருளைப் பெறுவர்.

     கு-ரை: கடல்காழி - கடலுக்கு அணித்தான சீர்காழி. நற்றமிழ் - வீட்டு
நெறி தரவல்ல தமிழ். “நற்றவஞ் செய்வார்க்கிடம்”. அற்றம் -
சொற்பொருளறவு. இல் - இல்லையாக்குகின்ற. பாடல் - அற்றம் முன்
காக்கும் அஞ்செழுத்து.

 

திருஞானசம்பந்தர் புராணம்

அப்பதியைத் தொழுதுவட திசைமேற் செல்வார்
     அங்கைஅனல் தரித்தபிரான் அமருங் கோயில்
புக்கிறைஞ்சிப் பலபதியுந் தொழுது போற்றிப்
     புணரிபொரு தலைகரைவாய் ஒழியப் போந்தே
செப்பரிய புகழ்த்திருவா டானை சேர்ந்து
     செந்தமிழ்மா லைகள் சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
     வணங்கினார் உலகுய்ய ஞானம் உண்டார்.

                                 -சேக்கிழார்.