பக்கம் எண் :

490திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக்
     கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மானம ரர்க்கம
     ரனன்றே.                           9

2930. கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில்
       லாததோர்
தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத்
     தன்னருள்
கொடுக்கலில் லாக்குழ கன்அம ருந்திருக்
     கோட்டாற்றுள்
இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை
     யாவரே.                           10


இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். நிழல்தரும் கோங்குமலர்ச்
சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பெருமான். தேவர்கட்கெல்லாம் தேவனாவான்.

     கு-ரை: ஓங்கிய - செருக்கால் மிக்க. நீங்கிய - அளவு நீங்கிய;
அளவு அறியமுடியாத-தீ உரு ஆகி நின்றவன். அமரர்க்கமரன் -
மகாதேவன். இவை சிவபெருமானுக்கு உரிய பெயர்.

     10. பொ-ரை: சாயம் பற்றும் பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த
காவி ஆடை அணிந்த புத்தர்களுக்கும், சிறுபாயைச் சுமந்து திரியும்
சமணர்களுக்கும் தன்னை நாடாததால், அருள் புரியமாட்டாத அழகன்
சிவபெருமான். திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியால் வழிபடுகின்றவர்களும்,
தேவர்கட்குத் தலைவராவர்.

     கு-ரை: சாயம் ஆடையில் பற்றுதற் பொருட்டுக் கடுக்காய் நீர்
உதவலால் கடுக்கொடுத்தது. செல்லுமிடங்களில் உட்காருவதற்குத் தடுக்கை
இடுக்கிச் செல்லுவர். பீலி, உறித்தாழ்ந்த கரகம் முதலியன கையிற் பற்றுதலின்
தடுக்கை இடுக்கிச் செல்லுவர். சமணேதிரிவார்-சமணமதத்திலே திரிபவர்.
இடுக்கண் இன்றித் தொழுவார்-இடுக்கண் துன்பம். இங்குச் சிரமம்
என்றபொருள், எளிய முயற்சியால் வழிபடுவாரேனும் என்றது. பித்தன்
என்றொருகால் பேசுவரேனும்