2931. |
கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் |
|
கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு
ளாளனைக்
கடிகம ழும்பொழிற் காழியுண் ஞானசம்
பந்தன்சொல்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை
பாவமே.
11 |
திருச்சிற்றம்பலம்
பிழைத்தவை பொறுத்தருள்
செய்வீர். தலவிசேடத்தால் சிறு சிவபுண்ணியமும்
பெரும் பயன் விளைக்கும் என்பது கருத்து.
11.
பொ-ரை: இடபத்தைக் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டு
திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான்
திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க, திருநடனம் புரியும் அருளாளன்.
அப்பெருமானை நறுமணம் கமழும் சோலைகளையுடைய சீகாழியில்
அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப்
பாடியாட வல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும்.
கு-ரை:
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் - கொடியின் கண்
உயர்த்திய பெரிய இடபத்தைவாகனமாகவும், உடையவன். மால்விடை
யென்பதற்குத் திருமாலாகிய விடை எனலுமாம்.
மும்மணிக் கோவை
பழியொன்றும்
ஓராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை-அழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரந்தரம்போய் நெஞ்சே நினை.
நினையாதரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள்
தனையாவ வென்றின் றருளுபதி யேதடஞ் சாலிவயற்
கனையா வரும்மேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால்
நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே.
-நம்பியாண்டார்நம்பி.
|
|