2948. |
விடையுடைக்
கொடிவல னேந்தி வெண்மழுப் |
|
படையுடைக்
கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுர னல்லனே. 6 |
2949. |
தூயவன்
தூயவெண் ணீறு மேனிமேல் |
|
பாயவன்
பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவ னெனைச்செயுந் தன்மை யென்கொலோ. 7 |
6.
பொ-ரை: இடபம் பொறித்த கொடியை வலக்கையில் ஏந்தி,
வெண்மழுப்படையையுடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ளான். உடுக்கை போன்ற குறுகிய இடையில் மேகலை என்னும்
ஆபரணம் அணிந்து, சீலையால் மறைத்த அல்குலையுடைய உமாதேவியைத்
தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு, சடையிலே கங்கையைத் தரித்த
சதுரன் ஆவான்.
கு-ரை:
வெண்மழு-இரும்பால் ஆகிய ஓர் ஆயுதம். தீட்டப்பெற்று
வெண்மையாயிருப்பதால் வெண்மழு எனப்பட்டது. விரவார் வெருவத்திருப்பு
சூலத்தினன். ஆதலால் இரத்தக்கறை முதலியன படியாத வெண்மழு என்றார்.
ஒருத்தி தன்னுடம்பில் ஒருபாகத்திலிருக்கவும் சடையில் மற்றொருத்தியை
நீர்வடிவமாகத் தோன்றுமாறு வைத்த சாமர்த்தியவான் அல்லரோ?
7.
பொ-ரை: இறைவன் தூயஉடம்பினன். தூய்மையான திருநீற்றைத்
தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன். திருப் பைஞ்ஞீலி என்னும்
திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுபவன்.
மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக்
கொண்டவன். அப்பெருமான் சீவனான என்னைச் சிவனாகச் செய்யும்
பண்புதான் என்னே!
கு-ரை:
பாய்தல்-பரவுதல். வெண்ணீறுமேனி மேல்பாயவன்-
வெண்ணீற்றை உடம்பின்மேல் பரவப்பூசினவன். பாய-இடமகன்ற
(விஸ்தாரமான) பைஞ்ஞீலி. கோயில்-மரூஉ. மேயவன்-விரும்பியவன்.
மே-விருப்பம். நம்பும் மேவும் நசையாகும்மே (தொல், சொல், உரி.)
வேய்புரை தோளி-மூங்கில் போன்ற தோளையுடையவள். பாகமா
ஏயவன்-பாகமாகப் பொருந்தியவன்.
|