3007. |
வழிதலை
பறிதலை யவர்கள் கட்டிய |
|
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே. 10 |
3008. |
அழகரை
யடிகளை அம்பர் மேவிய |
|
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே. 11 |
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: மழித்த தலையையும், முடி பறித்த தலையையும் உடைய
புத்தர்களும், சமணர்களும் கட்டுரையாகக் கூறியவற்றைப் பயனுடையவெனக்
கொள்ள வேண்டா. கங்கையைச் சடையிலே தாங்கி, அங்குமிங்கும் சுற்றித்
திரிதலை ஒழித்து, அம்பர் மாநகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
இறைவனைத் தரிசித்து அருள் பெற வாருங்கள்.
கு-ரை:
வழிதலையவர் - மழித்த தலையை யுடையவர்கள் - புத்தர்.
பறிதலையவர்கள் - மழித்தலால், மீளவும் முளைத்திடுமென்று பிடுங்கி
விடப்படுதலால் பறிதலையவர் எனப்பட்டனர்; சமணர் மொழியல் என்றதற்கு
மொழியா தொழிதல் பொருளாகக் கொள்க. ஒருமை பன்மை மயக்கம்.
அழிதலை பொருபுனல் அம்பர் - அங்கும் இங்கும் சுற்றித் திரிதலை ஒழிந்து,
அம்பர் மாநகரில் உமையும் தாமுமாக. உளர் - இருப்பர். அவரை வணங்கிப்
பயனெய்த வம்மின் என்பது.
11.
பொ-ரை: அழகரை, அடிகளை, திரு அம்பர் மாநகரில்
எழுந்தருளியிருக்கும் ஒளிர்கின்ற சடைமுடியுடைய நீலகண்டரான
சிவபெருமானை, அலைவீசுகின்ற கடலுடைய இவ்வுலகினில், முத்தமிழ்
விரகனாகிய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையாகிய
திருப்பதிகத்தை ஓதிச் சிவகதி பெறுமின்.
கு-ரை:
நிழல் - ஒளி. உமிழ்திரை - வீசுகின்ற அலைகளையுடைய
கடல். தமிழ்கெழுவிரகினன் - முத்தமிழ் விரகனாகிய நான் தமிழாற்
பாடப்பட்ட மாலையாகிய இப்பதிகத்தை. ஓதுவீர் - சிவபெருமானைப்
பாடுவீர்! இப்பாடல்களைக் கொள்ளுங்கள்! இப்பாடல் குறில் வருக்க
எதுகை. முதல் ஏழு பாசுரங்களிலும் ஆடுவர் என்றே கடவுளைப் பற்றிக்
கூறப்படுகிறது.
|