பதிக வரலாறு:
திருப்புத்தூரிலிருந்து
சிலநாள் வழிபட்டுத் திருநெல்வேலிக்குச்
செல்லுங் காலை, இடையில் உள்ள திருக்கானப்பேர், திருச்சுழியல், குற்றாலம்,
குறும்பலா ஆகியவற்றைக் கும்பிடு முன்னர், திருப்பூவணத்தை இறைஞ்சிப்
புகழ்ந்து பாடியது இத் திருப்பதிகம்.
பண்:
காந்தார பஞ்சமம்
ப.தொ.எண்: 278 |
|
பதிக எண்:20 |
திருச்சிற்றம்பலம்
3009. |
மாதமர் மேனிய னாகி வண்டொடு |
|
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரண மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மை யாகுமே. 1 |
3010. |
வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு |
|
தேனணி பொழிற்றிருப் பூவ ணத்துறை
ஆனநல் லுருமறை அங்கம் ஓதிய
ஞானனை அடிதொழ நன்மை யாகுமே. 2 |
1.
பொ-ரை: உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு
பாகமாகக்கொண்டு, வண்டமர்கின்ற மலர்கள் உள்ள சோலையுடைய அழகிய
திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, துன்பம்தரும்
பகையசுரர்களின் மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த நாதனான
சிவபெருமானின் திருவடிகளைத் தொழ எல்லா நலன்களும் உண்டாகும்.
கு-ரை:
போது அமர்பொழில் - மலர்கள் உள்ள சோலை. விரவலர் -
பகைவர்களாகிய அசுரர்கள். அரணம் மூன்றும் எய்த - மதில் மூன்றையும்
எய்த (நாதன்).
2.
பொ-ரை: வானில் அழகுறத் திகழும் சந்திரனைத் தொடுமளவு
உயர்ந்தோங்கிய, வண்டு நுகரும் தேனையுடைய மலர்களுள்ள
|