பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)20. திருப்பூவணம்537

3011. வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர்
  புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
நந்தியை அடிதொழ நன்மை யாகுமே.         3


அழகிய சோலையையுடைய திருப்பூவணத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நலம்
தரும் நான்கு வேதங்களையும், அவற்றின் ஆறு அங்கங்களையும் ஓதியருளிய
ஞானவடிவினனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ, எல்லா
நலன்களும் உண்டாகும்.

     கு-ரை: “வானணி...பூவணம்” - வானத்தை அழகுசெய்கின்ற
சந்திரமண்டலம் அளாவிய உச்சியையும், கருவண்டுகளுடன் தேன்வண்டுகளின்
வரிசையையுடைய சோலைசூழ்ந்த திருப்பூவணம். ஆன - பொருந்திய. நல்
அரு மறை - நல்ல அரிய வேதங்கள்; இருக்கு, யசுர், சாமம் இவையே சிறந்த
வேதம் எனப்படும். இவை மூன்றுமே சிறந்தன என்பதை, “சிறந்தவேதம்
விளங்கப்பாடி” என்ற மதுரைக்காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய
உரையானும் காண்க. ஆறு அங்கம் - வேதத்தின் ஆறு அவயவம். அவை;
சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்
என்பவை. ஞானன் - சிவனுக்கு ஒரு பெயர். “ஞானன் என்பவர்க்கன்றி
நன்கில் லையே” என்ற (திருக்குறுந்தொகை) அப்பமூர்த்திகள் அருளிச்
செயலிலும் காண்க

.      3. பொ-ரை: கொடுந்துன்பம் தரும் நோயும், அதற்குக் காரணமான
வினைகளும் சிவனருளாலேயே தீரும் என்பதை நிச்சயித்து, அவனைத்
தொழுது போற்றுகின்றவர்கள் வசிக்கும் திருப்பூவணம் என்னும் திருத்
தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, மாலைக்காலத்தில் உதிக்கும் வெண்
பிறையோடு கங்கையும் சூடிய சிவபெருமானின் திருவடிகளைத் தொழ,
எல்லா நலன் களும் உண்டாகும்.

     கு-ரை: வெந்துயர் - கொடுந்துன்பம். அதைத் தருவதாகிய பிணியும்,
அதற்குக் காரணமான கன்மமும் முற்றும் பற்றறத் தீர் விக்கும் புந்தியர்
என்றது, தாங்கள் செய்வனவற்றைச் சிவார்ப் பணமாகச் செய்தலும், தங்கட்கு
வருவனவற்றைச் சிவனரு ளெனக் கொண்டு அமைந்து நுகர்தலுமாகிய புத்தி
பண்ணுபவர். இதனை “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு
நாயகமே” என்ற திருவாசகத் தொடராலும் அறிக. தொழுது எழு -
பேராசிரியர் உரை