பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)20. திருப்பூவணம்539

3014. வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
  பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை
கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்
நறுமல ரடிதொழ நன்மை யாகுமே.            6

3015. பறைமல்கு முழவொடு பாட லாடலன்
  பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.    7


பிடித்துக் கொள்வது. தமிழ்மொழி. இதனை வட சொல் எனவுங் கூறுவர்.
தமிழில் அரிய பொருள் காணா வழியே வடசொல்லுக்கு ஏகல் வேண்டும்.
குருந்து ஒரு மரவிசேடம்; மணிவாசகப் பெருமானைப் பெருந்துறையில்
ஆட்கொண்டருளியது இம் மரத்தினடியிலேதான். “பெருந்துறையில் வந்தோர்
கொந்தலர் நெருங்கிய குருந்தடியிருந்தார்” என்பது பழைய திருவிளையாடல்.

     6. பொ-ரை: நறுமணம் கமழும் புன்னை, புலிநகக் கொன்றை
முதலான மரங்கள் நிறைந்த அழகிய சோலையையுடைய திருப்பூவணம்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, கோவண ஆடை தரித்த,
அழிதலில்லாத கொள்கைகளை உடைய சிவ பெருமானின் நறுமணமிக்க
மலர் போன்ற திருவடிகளைத் தொழ, எல்லா நலன்களும் உண்டாகும்.

     கு-ரை: கிறிபடும் - பரிகசிக்கத்தகுந்த. உடையினன் என்றது
ஆடையில்லாத கோலத்தையுடையவன் என்றபடி. கேடு இல் - கெடுக்க
முடியாத கொள்கையன். மலர் அடி - மலர்போன்ற அடி.

     7. பொ-ரை: பறையின் ஒலியும், முழவின் ஓசையும் ஒலிக்கப் பாடி
ஆடுபவன் இறைவன். அமைதி தவழும் சோலையையுடைய அழகிய
திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவன்.
நால்வேதங்களையும் பாடுபவன். உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு
கூறாகக் கொண்டவன். அப்பெருமானின் ஒலிக்கின்ற கழலணிந்த
திருவடிகளைத் தொழத் துன்பம் சிறிதும் இல்லை.

     கு-ரை: பாடல் ஆடலன் - பாடுதலோடு ஆடலையுடையவன், இங்குப்
பாடல் - ஆடுங்காற்பாடுவது; மூன்றாம் அடியிற் கூறுவது:- இருந்து பாடும்
வேதப்பாடல். அறைமல்கு - ஒலித்தல் மிகுந்த; கழல்.