3038. |
வண்டம ரோதி மடந்தை பேணின |
|
பண்டை
யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே. 8 |
3039. |
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச் |
|
சீர்வணச்
சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே. 9 |
8.
பொ-ரை: வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா
தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும்.
முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான். அடியார்கள்
தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில் அவர்களுக்கு
அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும்.
கு-ரை:
வண்டுஅமர் ... பேணின - வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய அம்பிகையாரால் பாராட்டிச்
செபிக்கப்பெற்றன. இராவணன்
பாடியது இப் பஞ்சாக்கரமே என்கிறது இரண்டாம் அடி. தொண்டர்கள் -
அடியார்கள். கொண்டு - தங்கள் கடமையைக் கொண்டு. துதித்தபின் -
செபித்த அளவில். அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக்
கொடுப்பன இவ்வைந் தெழுத்துமாம். தொண்டர்கள் கொண்டு துதித்தமை
ஆனாய நாயனார் புராணம் (தி.12) முதலியவற்றாலறிக.
9.
பொ-ரை: திருமாலும், பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய
திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும்
பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந்தெழுத்தாகும்.
கு-ரை:
பிரம விட்டுணுக்களால் காண முடியாத அடி என்றது.
அத்தகுசீரிய அடியைக் காணுவதுமட்டும் அன்று. அத் திருவடிப்
பேறாகிமேல் இன்பத்தில் திளைத்தலுமாகும். போர்வணம் - இறைவனுடைய
திருப்பெயராகிய தன்மையை (அஞ்செழுத்தை). பேசி - உச்சரித்து, பிதற்றும்
அதனையே எண்ணிப் பன்னிப் பன்னிப் பலதரமும் சொல்லும் பக்தருக்கு
(பிடித்தொன்றை விடாதுபேசல்
|