3057. |
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல |
|
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே. 6 |
3058. |
குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே |
|
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே. 7 |
வளநகர் எனினும் ஆம்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 4
ஆம் செய்யுட் கருத்து என்க.
6.
பொ-ரை: நெஞ்சமே! இறைவனைத் தவிர மற்றோர் பற்று
எதுவுமில்லை. நான்கு வேதங்களையும் நன்கு கற்று, கற்றதன்படி ஒழுகுகின்ற
அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில் சிற்றிடையும்,
பெரிய அல்குலும் உடைய, அழகிய ஆபரணங்கள் அணிந்த உமா
தேவியோடு, என்னை ஆட்கொண்ட பெருந்தகையாராகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
பெற்று எனை ஆளுடைப் பெருந்தகை. "யாவருக்குந்
தந்தைதாய் எனுமிவரிப்படியளித்தார் ஆவதனால் ஆளுடைய பிள்ளையார்
ஆய் அகில தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும் தாவில்
தனித்திரு ஞானசம்பந்த ராயினார்" என்னும் பெரிய புராணம் நோக்குக.
7.
பொ-ரை: நெஞ்சமே! மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை
விடுவாயாக. நிறைந்த வளையல்களை முன்கையில் அணிந்து, சிறந்த
ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு, இருண்ட சோலைகளையுடைய
அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில், பிறைச்சந்திரனைச் சடைமுடியில்
சூடிப் பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
குறைவளைவது மொழிகுறைவு ஒழி - (பல) குறைபாடுகள்
(நம்மை) வளைந்து கொண்டிருப்பதைப் (பிறரிடம்) சொல்லித் தவிர்க்க
வேண்டுகின்ற குறைவை இனி ஒழிவாயாக (நெஞ்சமே).
|