பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)25. திருந்துதேவன்குடி571

3066. செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
  கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.     4

3067. விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி
  மண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே.     5

3068. பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
  புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே.   6


     4. பொ-ரை:இப்பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய
திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து, வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று
உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திருவேடங்களின் சிறப்புக்கள்
கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன. நினைக்கச் சிந்தையில் சீரிய
கருத்துக்களைத் தோற்றுவிப்பன. கவிபாடும் ஆற்றலைத் தருவன.
சிவவேடக்காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன.

     கு-ரை: திருவேடத்தின் புகழைக் கேட்டாலும் மகிழ்வு உண்டாம்.
அவி-வேள்வித்தீயில் இடும் அவிசு.

     5. பொ-ரை: ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும்
திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின்
திருவேடம், இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி, தத்துவங்களே
தான் என மயங்குவதைத் தீர்க்கும். சிவலோகம் செல்லும் நெறிகாட்டும்.
முக்தி நெறி காட்டும்.

     கு-ரை: விண்-சுவர்க்கலோகம்:-போகபூமி. மதி தீண்டும்-சந்திர
மண்டலத்தை யளாவிய, தேவன்குடி.

     6.பொ-ரை: சந்திரனைத் தொடுமளவு ஓங்கி வளர்ந்துள்ள,
நந்தனவனச் சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின்