பக்கம் எண் :

790திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

காரெழில் வண்ணனோடு கன கம்மனை
     யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை யய வந்தி
     யமர்ந்தவனே.                     9

3425. கங்கையோர் வார்சடைமே லடை யப்புடை
       யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல
     லாவதொன்றே
சங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழு
     சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தா யயவந்தி
     யமர்ந்தவனே.                     10


இரண்டு கோலமாகவும், கார்மேகம் போன்ற அழகிய வண்ணனான
திருமாலும், பொன்போன்ற நிறமுடைய பிரமனும், காண முடியாவண்ணம்
நெருப்பு வண்ணமுமாகி, திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில், திரு
அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: பெண்ணோர் பாகம் - ஒரு பாகத்திற் பெண்ணும் ஒரு
பாகத்தில் ஆணுமாகி. ஈரெழிற் கோலமாகி - அழகிய இரண்டு கோலமாகி.
உடன் ஆவது - ஓருருவமாவதும். கனகம் அனையான் - நிறத்தினால்
பொன்னொப்பான் ஆகிய பிரமன். ஆர் அழல் வண்ணம் ஆகி, அருமை +
அழல் அணுகற்கரிய தீயின் வண்ணம் - இங்கு வடிவின் மேல் நின்றது.
மங்கை - சாத்தமங்கை.

     10. பொ-ரை: சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில் தாங்கி,
பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை சொல்லக் கூடிய
தொன்றா? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக் கற்ற அந்தணர்கள்
தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உள்ளங்கையில்
பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில்
வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: கங்காதேவி ஓர் வார்சடையின் பால், அடைய, புடை -
(உடம்பின்) ஒருபக்கல். மணம் புரிந்து கொண்ட உமாதேவியோடு