3549. |
அந்தண்மதி
செஞ்சடைய ரங்கணெழில் |
|
கொன்றையொ
டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது
வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர்
சிந்துமயி லாடுதுறையே. 2 |
ஆமையோடும். இவை
- (ஆகிய) இவற்றை. பூண்டு - அணிந்து.
இறைஞராய் - வாலிபராகி. (சதாசிவமூர்த்தத் தியானம் பதினாறு வயதினராகப்
பாவிக்கச் சொல்வது காண்க.) கானம் - காட்டில் வாழும். வரி -
கீற்றுக்களையுடைய. நீடு - நெடிய. உழுவை அதள் - புலித்தோலை.
உடைய - ஆடையாக உடைய. படர் சடையர் - படர்ந்த சடையை
உடையவராகிய சிவபெருமானது. காணி - உரிய இடம் எனலாம். ஆனபுகழ்
- சிறந்த புகழையுடைய. வேதியர்கள்(செய்யும்) ஆகுதியின் மீது -
வேள்வியில் (கிளம்பும்) புகை - புகையானது. போகி - மேற்சென்று.
அழகார் - அழகு மிகுந்த. வானம் உறு - தேவலோகத்தில் உள்ள.
சோலைமிசை - கற்பகச் சோலையின் மீது. மாசுபட - அழுக்கு உண்டாக.
மூசு - மூடுகின்ற மயிலாடுதுறை.
2.
பொ-ரை: சிவபெருமான் அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த
சிவந்த சடையையுடையவர். அச்சடையிலே அழகிய கொன்றை மாலையை
அணிந்த அழகரான எம் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இனிய இடம்
திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலமானது மணம்
கமழும் சந்தனமரங்களோடு, கரிய அகில் மரங்களையும் வாரிக் கொண்டு
வரும் காவிரியின் அலைகள் தம்மேல் நீர்த்திவலை வீசுவதால், அதனைக்
கோபித்து அதற்கு எதிராக, கரையோரத்துச் சோலைகளிலுள்ள குரங்குகள்
மலர்களை வீசுகின்ற தன்மையுடன் திகழ்வதாகும்.
கு-ரை:
அந்தண்மதி - அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த.
(செஞ்சடையர்). அங்கண் - அந்தச் சடையினிடத்தில். எழில் - அழகிய.
கொன்றையொடு-கொன்றை மாலையோடு. அணிந்து - சூடி. அழகராம் -
அழகராகிய. எந்தம் அடிகட்கு - எமது கடவுளாகிய சிவபெருமானுக்கு.
இனிய - விருப்பமான. தானம் அது - இடமாவது.
|