பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)70. திருமயிலாடுதுறை891

3550. தோளின்மிசை வரியரவ நஞ்சழல
       வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது
     காடுறையு முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி
     யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமண
     நாறுமயி லாடுதுறையே                 3


வேண்டில் - எது என அறிய வேண்டுவீரேல், எழிலார் பதியதாம்; அழகு
மிக்க பதி அது ஆகும். (மயிலாடுதுறை) கந்தம் மலி - வாசனை மிகுந்த.
சந்தினொடு - சந்தன மரங்களோடு. கார் அகிலும் - கரிய அகில்
மரங்களையும். வாரிவரு - வாரிக்கொண்டு வருகின்ற. காவிரி உள் - காவிரி
நதியில். வந்ததிரை - வந்த அலைகள். உந்தி - தம்மேல் நீர்த்திவலை
வீசுவதால். எதிர - அதற்கு எதிராக. மந்தி - கரையோரத்துச்
சோலைகளிலுள்ள குரங்குகள். மலர் சிந்து - மலர்களை வீசுகின்ற.
மயிலாடுதுறை. தம்மீது திவலை சிந்திய காவிரியைக் கோபித்து, மந்திகள்
அதற்கு எதிராக மலர்களை வீசுகின்றன எனத் தலத்தின் வளம் கூறியவாறு.
உந்தி - உந்த. வினையெச்சத்திரிபு.

     3. பொ-ரை: சிவபெருமான், தோளின்மீது வரிகளையுடைய
பாம்புநஞ்சை உமிழுமாறு, அதனை இறுக அணிந்தவர். எண்ணுதற்கு
அரியவராய் விளங்குபவர். மூளை நீங்கிய பிரமகபாலத்தில் பலியேற்று
உண்டு சுடுகாட்டில் வசிப்பவர். எப்பொருட்கும் முதல்வரான
அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், காவிரியிலுள்ள வாளைமீன்கள்
கரையோரங்களிலுள்ள பாளைபொருந்திய பசிய கமுக மரங்களில் பாய,
அவை சிவந்த பழங்களை உதிர்க்க, அதனால் பூ இதழ்கள் விரிய
நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: தோளின் மிசை - தோளின் மீது. வரி அரவம் - நெடிய
பாம்புகளை. நஞ்சு அழல - விஷத்தைத் கக்க. வீக்கி - கட்டி. மிகு -
மிகுந்த. நோக்கு அரியராய் - அரிய அழகுடையவராய். மூளைபடு -
மூளையிருந்த. வெண் தலையில் - வெள்ளிய மண்டையோட்டில் (உண்டு).
முதுகாடு உறையும் - சுடுகாட்டில் வசிக்கும். முதல்வர் இடமாம். வாளை
குதி கொள்ள - வாளை மீன்கள் தாவ. (அதனால்). பாளைபடு - பாளை
பொருந்திய. பைங்கமுகு - பசிய கமுகு மரங்கள்.