பக்கம் எண் :

976திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3638. காடர்கரி காலர்கனல் கையரனன்
       மெய்யருடல் செய்யர்செவியில்
தோடர்தெரி கீளர்சரி கோவணவ
     ராவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கண்மல
     ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை
     மேவுதிரு வேதிகுடியே.                 4


     கு-ரை: போழும் மதி - வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச்சந்திரன்.
பூண் - சுற்றிய. அரவு - பாம்பு. (கொன்றை மலர் ஆகிய இவைகள்)
துன்றுசடை - நெருங்கிய சடா மகுடத்தினின்றும். வென்றி புக - (பகீரதன்
முயற்சிக்கு) வெற்றி உண்டாக. மேல் வாழு நதி - அதன் மேல் தங்கிய
கங்காநதியை. தாழும் - உலகிற் பாயச்செய்த (அருளாளர்) இருளார் மிடறர்
- கருமை பொருந்திய கண்டத்தை யுடையவர். மாதர் இமையோர் -
மாதர்களோடு கூடிய தேவர்கள். சூழும் இரவாளர் - சுற்றி நின்று தங்கள்
குறைகளை வேண்டி இரக்கப்படுபவர். (திருமார்பில்) விரி நூலர் - ஒளி
பரவிய பூணூலை யுடையவர். வரி தோலர் - புலித்தோலுடையையுடையவர்.
மேல் - உடம்பின்மீது. வேழ உரி போர்வையினர் - யானைத் தோலைப்
போர்வையாகக் கொண்டருளியவர் (ஆகிய சிவபெருமான்) மேவு பதி -
தங்கும் தலம். வேதிகுடி என்பர் - திருவேதிகுடி என்பர்.

     4. பொ-ரை: சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பவர். யானையின்
தோலை உரித்து அதற்குக் காலனாக ஆனவர். நெருப்பைக் கையில்
ஏந்தியவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனி உடையவர். தூய உடம்பினர்.
காதில் தோட்டை அணிந்தவர். கிழிந்த ஆடை அணிந்தவர். சரிந்த
கோவணத்தை அணிந்தவர். பசுவேறி வரும் கோலத்தையுடையவர்.
அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமையான நகரானது, தோத்திரம்
பாடும் அடியார்கள் புனிதநீரால் அபிடேகம் செய்து, மலரால் அர்ச்சித்து
வணங்கி, சிவவேடத்தை நினைப்பூட்டும் திருவெண்ணீற்றினைப் பூசிக்
கீர்த்தியுடன் விளங்குகின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: காடர் - மயானத்திலிருப்பவர் "கோயில் சுடுகாடு" என்பது
திருவாசகம். கரிகாலர் - யானைக்கு யமன் ஆனவர். கனல் கையர் -
நெருப்பைக் கையில் ஏந்தியவர். அனல் மெய்யர் - நெருப்பே