3639. |
சொக்கர்துணை
மிக்கவெயி லுக்கற |
|
முனிந்துதொழு
மூவர்மகிழத்
தக்கவருள் பக்கமுற வைத்தவர
னாரினிது தங்குநகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல்
பற்றிவரி வண்டிசைகுலாம்
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர்
போகநல்கு வேதிகுடியே. 5 |
உடம்பாக உடையவர்.
உடல் செய்யர் - அதனால் மேனி செந்நிறம்
உடையவர். செவியில் தோடர் - காதில் தோட்டையணிந்தவர். தெரிகீளர் -
தெரிந்தெடுத்த கீளையுடையவர். சரிகோவணர் - சரிந்த கௌபீனத்தை
அணிந்தவர். ஆவணவர் - பசுவேறிவரும் கோலத்தையுடையவர் (ஆ - பசு;
வண்ணம் - கோலம்) தொல்லைநகர்தான் - சிவபெருமானின் பழமையான
தலம் ஆகிய. பாடல் உடையார்கள் அடியார்கள் - தோத்திரம் பாடுதலை
உடையவர்களாகிய அடியார்கள். மலரோடு புனல் கொண்டு - மலரையும்
தண்ணீரையும் கொண்டு. பணிவார் - வணங்குபவர்களாய். வேடம் -
வேடத்திற்குரியதாகிய. ஒளியான - பிரகாசம் பொருந்திய. பொடிபூசி -
திருநீற்றை உத்தூளித்து. இசைமேவு - கீர்த்தியடைகின்ற (திருவேதிகுடியே)
பொ
- ரை: சிவபெருமான் மிக்க அழகுடையவன். கோபத்தால்
சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது, அங்கிருந்த மூவர்
தன்னை வணங்கிப் போற்ற அவர்கள் மகிழும்படியாகத் தன் பக்கத்திலே
இருக்கும்படி அருள்புரிந்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது,
மாமரச் சோலைகளில் மகளிர் விளையாடும் ஆரவாரமும், மகளிரின் மேனி
ஒளியானது மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும்
ஒலியும், தேவர்களை போற்றும் ஒலியும் கொண்டு, தன்னையடைந்து
வழிபடுபவர்களின் அச்சமும், துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும்
திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
சொக்கர் - பேரழகு உடையவரும். துணைமிக்க -
தங்களுக்குத் தாங்கள் உதவி செய்துகொள்வதில் மிக்க. எயில் -
மதிலிலிருந்த அசுரர். உக்கு - பொடியாகி. அற - ஒழிய. முனிந்து -
கோபித்து. தொழும்மூவர் - அவர்களுக்குள் தன்னை வணங்கிய மூவர்.
மகிழ - மகிழும்படியாக, பக்கம் உற - தன் பக்கத்திலே
|