இளவரையர் ஆவர்1. இக் கோயிலின் வான்கயிலாயத் திருமாளிகையை ஸ்தூபி பரியந்தம் திருமஞ்சனம் பண்ணிப் புறச்சாருணைத் திருக்கல்லும் சாத்தி அருளியவர் கேரள வம்சத்து இரவிவர்ம மகாராஜரான பெருமாள் குலசேகர தேவராவர2. இது நிகழ்ந்த காலம் கலியுகம் 4414. சகம் 1235. அதாவதுகி. பி. 1313 ஆகும். திருக்காமக்கோட்டத்தைக் கட்டியவர்: திருக்காமக்கோட்டமென்பது இறைவியார் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாகும். இக்கோயிலைக் கட்டியவர் முதற் குலோத்துங்கசோழன் விக்கிரம சோழன் இவர்களின் படைத் தலைவராய் இருந்த தொண்டை மண்டலத்து மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊதின் தலைவரான கூத்தர் காலிங்கராயர் ஆவர். இவர் இக் கோயிலைக்கட்டிய செய்தி இக் கோயிலில் பொறிக்கப் பெற்றுள்ள, “அருமறைமா தாவி னறக்காமக் கோட்டந் திருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவங் கண்டா னெதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக் கொண்டானந் தொண்டையர் கோ.” என்னும் வெண்பாவால் விளங்கும். திருவதிகை வீரட்டானமுடையார் கோயிலைப்பொன் வேய்ந்தவர்: இக்கோயிலைப் பொன் வேய்ந்தவர் மேற்குறித்த கூத்தர் காலிங்கராயர் ஆவர்.இச் செய்தியை, “தென்னதிகை வீரட்டஞ் செம்பொனால் வேய்ந்திமையோ பொன்னுலகை மீளப் புதுக்கினான் - மன்னுணங்கு முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த கொற்றத்தான் தொண்டையர் கோ.”
1. See the South Indian Inscriptions Volume VIII, Ins. No. 308. 2. Epigraphia Indica Volume VIII.
|