பக்கம் எண் :

105
 

என்னும் வெண்பா உணர்த்தும்.

மணவில் கூத்தர் வீரட்டானமுடையார்க்குச்செய்த வேறு திருப்பணிகள்:

அதிகை நாயகர்க்கு நூற்றுக்கால் மண்டபத்தை அமைத்தார். மடைப்பள்ளியைச் சிலையால் சமைத்தார். மண்டபம் மாளிகை. பெரிய திருச்சற்று இவைகளைக் கட்டினார். யாக மண்டபத்தைச் செய்தார். ஆடல் அமர்ந்த பிரானுக்குக் கோயிலும் அரங்கும் அமைத்தார்.

ிள்ளையார்கோயில்:

வீரட்டானமுடையார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் திருப்பெயர் மூத்தநயினார் என்பதாகும். இவரது கோயிலைச் சகம் 1399இல் வெண்ணெய்ப் பெருமாள் என்பவர் பழுதுபார்த்துள்ளனர்.

ிருவிழாக்கள்:

இக் கோயிலில் தை மாதத்திலும், வைகாசி மாதத்திலும் விழாக்கள் நடைபெற்று வந்தன. தை மாத விழாவில் தேர் இழுக்கப்படுவது உண்டு. நாற்பது ஆண்டுகள் இக்கோயிலில் தேர் இழுக்கப்படாமல் இருந்தது. அதன் பொருட்டுச் சாளுவ பரம்பரையைச் சேர்ந்த நரசிங்கதேவ மகாராயரது தளவாய் அறம் வளர்த்த நாயனார்சகம் 1400இல் அதாவது கி. பி. 1478இல் திருத்தேர் ஒன்றைச் செய்து வைத்துள்ளனர்.

வைகாசி மாதம் நடைபெறும் விழா வசந்த விழாவாகும். அதன்பொருட்டு, சாளுவப் பரம்பரையைச் சேர்ந்த நரசிங்கதேவ மகாராசர் காலத்தில் திம்மி நாயக்கர் என்பவர் திரிபுவன மாதேவிப்பட்டணத்தைச் சேர்ந்த முதுகுளத்தூரில் வசூலிக்கப்படும் வரிப் பணத்தைக் கொடுத்துள்ளார்.

திருநாவுக்கரசரைப்பற்றிய செய்திகள்

வாகீசர் திருக்கோயில்:

வாகீசர் என்பது சைவ சமய குரவர் திருநாவுக்கரசராகிய பெருந்தகையார்க்குள்ள வேறு திருப்பெயராகும். இவர்க்கு, இத்