பக்கம் எண் :

106
 

திருவதிகை வீரட்டானக் கோயிலில் ஒரு தனிக்கோயில் உண்டு. இக்கோயிலைக் கட்டியவர், மேலே குறிப்படப்பட்ட மணவில் கூத்தனான காலிங்கராயர் ஆவார். இச் செய்தி.

ஈச னதிகையில்வா கீச னெழுந்தருள
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்
விளைவித்த வேணாடும் வெற்பனைத்துஞ் செந்தீ
வளைவித்தான் தொண்டையார் மன்.

என்னும் வீரட்டானக்கோயில் கல்வெட்டுப் பாடலால் விளங்கும்.

வாகீசர் திருமடம்:

இவ்வூரில் வாகீசர் திருப்பெயரால் மடம் ஒன்றிருந்தது. இதற்குத் திருமுனைப்பாடிக் கீழாமூர் நாட்டுக் கணிச்சப்பாக்கத்து ஊரார், தங்கள் ஊர்த்தலைப்பாடகத்தில் இராசேந்திரப்பேரேரி கீழ்கரைக்குக் கிழக்கும், வபுக்கெல்லை இந்நாட்டுப் பனைப்பாக்கத்து எல்லைக்குத் தெற்கும், கிழக்கெல்லை மதனிபாக்கத்தெல்லைக்கு மேற்கும், தெற்கெல்லை உற்றடத்து உறவும் ஆக இந்நான்கு எல்லைக்கு நடுவுட்பட்ட நிலம் குழி இரண்டாயிரத்தைத் திருவீரட்டானமுடையார் வாகீசர் மடத்துக்கு மடப்புறமாக எட்டுக் காசுக்கு விற்றுக் கொடுத்திருந்தனர். இம்மடத்திற்கு மடப்புறமாகப் பனைப்பாக்கத்து ஊராரும் அரைவேலி நிலம் விட்டிருந்தனர். இது நிகழ்ந்தது முதலாம் குலோத்துங்க சோழதேவரின் 44ஆம் ஆண்டாகும்.

திருநாவுக்கரையதேவர்திருமடம்:

இவ்வூரில் இப்பெயருள்ள திருமடம் ஒன்றிருந்தது. இதில் உணவு அளித்தற் பொருட்டு அரும்பாக்கம் என்னும் ஊரின் தலைவனாகிய மதுராந்தகதேவன் பொன்னம்பலக்கூத்தன் திருவதிகையில் தனக்குச் சொந்தமாயிருந்த 4800 குழி புன்செய் நிலத்தை முதற் குலோத்துங்கனின் 48 ஆம் ஆண்டில் அளித்துள்ளனர்.

திருநாவுக்கரசரது திருப்பெயரைத் தெருவிற்கு இட்டு வழங்கியமை:

இவ்வூரிலுள்ள பிடாரிகோயிலின் வடபால் ஒரு காடு இருந்தது. அதை வெட்டி ஒருபுதிய தெருவை உண்டாக்கி அதற்குத்