வீரராசேந்திரன் காலத்தில் (கி.பி.1057) மும்முடிச்சோழப் பேரியான் நுந்தாவிளக்கு வைத்ததும், காடன்தேவன் 80 கலம் நெல் தந்ததும் காண்கின்றன. குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1076-ல் இராமேச்சுரமுடையான் நுந்தா விளக்கிற்காக 20 காசு தந்ததும் இதில் கண்டிருக்கிறது. விக்கிரமசோழன் காலத்தில் (கி.பி. 1118 1124 25)மூவேந்தவேளான் ஒரு விளக்கிற்காக 18 காசும் உலகளந்த மூவேந்த வேளான் 18 காசும் கொடுத்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1213) காலத்தில் தேவதானத்தில் எல்லை குறிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் சோழமன்னர்களுள் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜராஜ ராஜகேசரிவர்மன்(முதலாம் இராஜராஜசோழன்), இராஜகேசரிவர்மனாகிய உடையார் வீர ராஜேந்திர தேவன், இராஜகேசரிவர்மனாகிய உடையார் இராஜமகேந்திர தேவன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழதேவன் இவர்கள் காலங்களிலும் பாண்டியர்களில் பெருமாள் விக்கிரமபாண்டியன் காலத்திலும், விஜயநகரப் பரம்பரையினரில் வீரவிருப்பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருக்கடைஞாழல் பெருமான் அடிகள், திருக்கடைஞாழல் ஆழ்வார், தோன்றாத்துணை ஆளுடையார் , திருக்கடைஞாழல் உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இவ்வூரை மதுரைகொண்ட கோப்பர கேசரிபன்மரின் கல்வெட்டு வடகரைதேவதானம் திருப்பாதிரிப் புலியூர் எனவும் இராஜகேசரிபன்மரான உடையார் இராஜமகேந்திர தேவர் கல்வெட்டு வடகரை இராஜேந்திரசோழ வளநாட்டு மேல்கால் நாட்டுப் பிர்மதேயம் திருப்பாதிரிப்புலியூர் எனவும், விக்கிரமசோழ தேவர் கல்வெட்டு இராஜராசவள நாட்டுப் பட்டான்பாக்கைநாட்டுத் திருப்பாதிரிப்புலியூர் எனவும் ‘வீரமே துணையாக’ என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய வீரராசேந்திரசோழதேவர் கல்வெட்டு இராஜேந்திரசோழ வளநாட்டுப் பவித்திரமாணிக்கவளநாட்டு பிர்மதேயம் பரநிருப பராக்கிரம சதுர்வேதிமங்கலம் எனவும் கூறுகின்றன. மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கல்வெட்டு “வடகரை தேவதானம் பாதிரிப்புலியூர் திருக்கடைஞாழல் பெருமான் அடிகளுக்கு” எனவும் கோவிராசகேசரிபன்மரான உடையார் ஸ்ரீ
|