இராசமகேந்திரதேவரின் கல்வெட்டு வடகரை இராசேந்திர சோழவளநாட்டு மேல்கால்நாட்டுப் பிர்மதேயம் பாதிரிப்புலியூரான பரநிருப பராக்கிரம சதுர்வேதி மங்கலத்து உடையார் திருக்கடை ஞாழலுடையாருக்கு எனவும் முதற்குலோத்துங்க சோழன் கல்வெட்டு திருப்பாதிரிப்புலியூர்த் திருக்கடைஞாழல்உடைய பெருமான் அடிகள் எனவும் குறிப்பிடுகின்றன. ஆதலால் ஊரின் பெயர் பாதிரிப்புலியூர் ஆகவும் கோயிலின் பெயர் ஞாழற்கோயிலாகவும் கொள்ளவேண்டும். நாவுக்கரசு பெருந்தகையார் “கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்” என்று தாம் அருளிய அடைவுதிருத்தாண்டகத்தில் குறிப்பிட்டிருக்கும் கோயில் இப்பாதிரிப்புலியூர்க்கோயில் என்பதை மேற்கண்ட கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. ஞாழல் என்பதற்குப் புலிநகக்கொன்றை என்ற பொருள் உண்டாயினும் அதைத் தலவிருட்சமாகக் கொள்ளுதற்கில்லை. இவ்வூர்க்குரிய தலவிருட்சம் பாதிரிமரமாதலால் பாதிரிப்புலியூர் என்று பெயர்பெற்றது. மேலும் ஒரு ஊருக்கு இரண்டு தல விருட்சங்கள் கிடையாதென்பதையும் உய்த்துணரவேண்டும். பாதிரி என்ற சொல் தேவாரத்தில் வருவதால் அதுவே தலமரமாதல் வேண்டும். இக்கோயில் கல்வெட்டுக்கள் நுந்தாவிளக்கினுக்கும், திருவமிர்துக்கும், பூந்தோட்டத்திற்கும் நிவந்தங்கள் கொடுத்த செய்திகளைக் குறிப்பிடுகின்றன. “திருநட்டக்கணப்பெருமக்கள் வழி கொடுத்த தோட்டம்” “திருவுண்ணாழிகைப் பெருமக்களோம் திருவமிர்துக்கு வேண்டும் முதல் இவரிடைப்பெற்றோம்”என்னும் கல்வெட்டுத் தொடர்கள் திருநட்டக்கணப் பெருமக்களும், திருவுண்ணாழிகைப் பெருமக்களும் இக்கோயில் நிர்வாகிகளில் சிலர் என்பதைக் குறிப்பனவாகும். இவ்வூர்க் கல்வெட்டுப் பாடலில் திருநாவுக்கரசுப் பெருந்தகையார் பரசமய கோளரி மாமுனிவர் என்னும் ஒருவரால் கூறப்பெற்றிருப்பதோடு அவர்மீது புராணம் இயற்றிய புலவர்க்கு இரண்டு மா நிலம் இறையிலி யாகக் கொடுத்த செய்தி குறிப்பிடப் பெற்றுள்ளது. கன்னி வன புராணமும் திருப்பாதிரிப்புலியூர் நாடகமும் பரசமய கோளரி மாமுனி என்பவரால் இயற்றப்பட்டவை. இச்செய்தி முதற் குலோத்துங்க சோழதேவரின்(கி.பி.1070 முதல் 1120 வரை) நாற்பத்தொன்பதாம் ஆண்டில்(கி.பி. 1119 ) இற்றைக்கு எண்ணூற்
|