றெழுபத்தெட்டு ஆண்டிற்கு முன்னதான கல்வெட்டில், குறிப்பிடப்படுகிறது. மேலும் முதற்குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டுப் பாடல் ஒன்று இக்கோயிலுக்குக் கன்னிவன புராணமும், நாடகமும்பாடிய நாவலர் ஒருவர்க்கு நிவந்தம் அளித்ததையும் குறிப்பிடுகின்றது. வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டு1 இவ்வூரில் புஷ்பகிரிமடம் ஒன்று இருந்ததைப்பற்றித் தெரிவிக்கின்றது. 43. திருப்புகலூர் தலம்: சோழவள நாட்டில் காவிரித்தென்கரையில் அமைந்துள்ள 75 ஆவது தலம். நாகை மாவட்டத்தில் நன்னிலம் கோட்டத்தைச் சேர்ந்தது. நன்னிலம் சன்னாநல்லூர் நாகையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறை - திருவாரூர் புகைவண்டி இருப்புப் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. புன்னாகவனம், சரண்யபுரம், ரத்தனாரண்யம் என்பன புராணங்களில் வழங்கும் மறுபெயர்கள். இத்தலத்தின் திருக்கோயில் நாற்புறமும் அகழிசூழ நடுவில் இருக்கிறது. அக்னி பகவான் பூசித்துப் பேறுபெற்றதலம். திருநாவுக்கரசர் முத்தி பெற்ற தலம். முருக நாயனாருடைய அவதார ஸ்தலம். சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய திருத்தலம். மேகங்கள் பூசித்ததலம். பெயர்கள்: இறைவன் பெயர் அக்னிபுரீஸ்வரர்; இறைவி கருந்தாள் குழலியம்மை. இறைவன் திருநாமம் தேவாரங்களில்‘கோணப்பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே’ ‘கருந்தாள்குழலியும் தாமும் கலந்து’ என்பன அம்மையப்பர், திருநாமங்களை அறிவிக்கும் அகச்சான்றுகள். தீர்த்தம்: அக்னிதீர்த்தம். இதற்குப் பாணதீர்த்தம் என்றும் ஒரு
1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1928, No. 42-108.
|