பெயருண்டு. முடிகொண்டான்ஆறு, கோயிலுக்குத் தென்பக்கத்தில் ஓடுகிறது. தல விருட்சம்: புன்னை. ‘புன்னைப் பொழிற்புகலூர்’ , ‘புன்நாகம் மணங்கமழும் பூம்புகலூர்’என்ற திருமுறைகள் இதற்கு மேற்கோள். விழா: சித்திரைச் சதயத்தைப் பத்தாம் நாளாகக்கொண்டு விழா நடைபெறுகிறது. பத்துநாளிலும் அப்பர் சுவாமிகள் வரலாற்றை ஒட்டிய ஐதீகமே நினைவூட்டப்பெறுகின்றது. வைகாசி மாதம் பருவ இறுதியாகப் பிரமோற்சவம் நடைபெறுகிறது. சந்திரசேகரர் விசேஷமான மூர்த்தி. வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது. வர்த்தமானீச்சரம் இக்கோயிலுக்குள் உள்ளது. கல்வெட்டு: அரசாங்கத்தினர் படி எடுத்த கல்வெட்டுக்கள் 67. அவை இராஜராஜன் I (கி.பி.985-1014) காலத்திலிருந்து காணப்படுகின்றன. இரண்டாம் பிராகாரம் இராஜ ராஜன் I இராஜ இராஜேந்திரன் I இவர்கள் காலத்திற்குப் பிந்தியதாகும். இக்கோயில் அர்த்தமண்டபத்தைக் கட்டியவன் இறையூர் உடையான் அரையன் கங்கைகொண்டானான சோழ விச்சாதரப் பல்லவரையன். முதல் பிராகாரத்துத் தென்னந் திருவாயிலுக்கு ராஜராஜன் திருவாசல் என்றுபெயர். கர்ப்பக் கிருகத்தைச் சுற்றியுள்ள நீராழிப்பத்தி மண்டபத்தைத் திருப்பணிசெய்தவன் ஆர்க்காடு கிழான் சேதுராயன் என்பவன். இத்தலத்து ‘நரலோக வீரன் திருமண்டபம்’ என்ற ஒன்று இருந்ததாக ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. சிதம்பரம் கோயில் கல்வெட்டில் நரலோகன் என்று கூறப்பட்டவன் கோப்பெருஞ்சிங்கன். அக்காலத்து நூற்றுக்கால் மண்டபம் அவனால் கட்டப்பெற்றது. அதுபோல இத்தலத்தும் நூற்றுக் கால் மண்டபத்தை அவன் கட்டியிருக்கக்கூடும். திருமதில் திருப்பணி வேளாக்குறிச்சி மகாதேவ பண்டாரத்தின் சிஷ்யரான அருணாசலத் தம்பிரானால் செய்யப்பெற்றது. மூன்றாங்குலோத்துங்கன் காலத்திலும் இக்கோயில் அகழால்
|