பக்கம் எண் :

270
 

நோய் வந்ததாகப் பொய்கூறிச் சைவராய் நம் மதத்தையும் கடவுளரையும் இழித்துரைக்கின்றார்’என்று பொய்ச்செய்தி சித்திரித்து மெய்யுரை போல் வேந்தனிடம் விளம்பினர். இத்தகைய குற்றத்திற்குத் தரப்படும் தண்டனை யாதென அவர்களையே வினவினான் அரசன். ‘நன்றாகத் தண்டித்து ஒறுக்கவேண்டும்’ என்றனர் சமணர். மன்னவன் அமைச்சரை வரவழைத்துத் திருநாவுக்கரசரைத் தம்மிடம் அழைத்துவருமாறு அனுப்பினான். அமைச்சரும்திருநாவுக்கரசரிடம் சென்று அரசன் ஆணையை அறிவித்துநின்றார்கள். திருநாவுக்கரசர் ‘சிவபெருமானுக்கேமீளா ஆளாய் அவன் திருவடிகளையே சிந்திக்கும் நாம்யார்க்கும் அடங்கிவாழும் எளிமையுடையோமல்லம்; நமன் வரினும் அஞ்சோம்’ என்னும் பொருள் பொதிந்த தொடக்கத்தை உடைய ‘நாமார்க்கும் குடியல்லோம்’என்று தொடங்கும் மறுமாற்றத் திருத்தாண்டகப் பதிகம் பாடியருளினார்.

நீற்றறை குளிர்ந்தது:

அமைச்சர், அரசதண்டத்திலிருந்து நாங்கள் உய்யுமாறு தாங்கள் எழுந்தருளவேண்டுமென வேண்டினர். திருநாவுக்கரசரும் ‘ஈண்டு வரும் துயர்கட்கு இறைவனுளன்’ என்னும் உறுதியோடு அரசன் முன் அடைந்தார். அரசன் சமணர்களைக் கலந்தாலோசித்து நீற்றறையிலிடுமாறு அவர்கள் கூறியபடியே தண்டனை விதித்தான். அவ்வாறே. ஏவலர் சிலர் அடிகளை நீற்றறையிலிட்டுத் தாளிட்டனர். நாவுக்கரசர், பெருமான் திருவடி நிழலைத் தலைமேற்கொண்டு சிவபெருமானைத் தியானித்து இனிதே இருந்தார். வெய்ய அந்நீற்றறை நிலவொளி, தென்றல், யாழிசை தடாகம் இத்தனையும் கூடிய இளவேனிற் பருவத்து மாலைக்காலமாய் இன்பம் செய்தது. ஏழு நாட்கள் சென்றன. சமணர்கள் நீற்றறையைத் திறந்து பார்த்தனர். சிவானந்த வெள்ளத்தில் மூழ்கி அம்பலவாணரின் திருவருள் அமுதுண்டு எவ்வகை ஊனமும் இன்றி வீற்றிருந்த திருநாவுக்கரசரைக் கண்டு அதிசயித்தனர், வியந்தனர்.

நஞ்சும் அமுதாயிற்று:

பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று ‘நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை’ என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடியோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். ‘எம்பிரான் அடியார்க்குநஞ்சும் அமுதாம்’