பக்கம் எண் :

273
 

உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். “பொன்னார் திருவடிக்கு” என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்பமும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார். சிலநாள் தங்கி உழவாரப்பணி செய்து சுடர்க் கொழுந்தீசனைப் பாடிப் பரவினார்.

பிறகு, திருநாவுக்கரசர் திருவரத்துறை, திருமுதுகுன்றம் முதலான தலங்களைத் தரிசித்து நிவாநதியின் கரைவழியாகக் கடந்து தில்லையம்பதியை அடைந்தார். தில்லையில் பறவைகளும் சிவநாம முழக்கம் செய்வது கேட்டு இன்புற்று சிவனடியார் பலரும் வரவேற்க சிவமே நிலவும் திருவீதியை அடைந்து திருக்கோயிலுக்குள்புகுந்தார். தில்லையம்பலத்தில் திருநடம் புரியும் பெருமானைப் பணிந்து தெவிட்டாத இன்பம் பெற்றார். கைகளைத் தலைமேல் குவித்து, கண்கள் ஆனந்தக்கண்ணீர் சொரிய, கரணங்கள் உருக வீழ்ந்து எழுந்து என்று வந்தாய் என்னும் எம்பெருமான்தன் திருக்குறிப்பைப் போற்றி ‘கருநட்ட கண்டனை’, ‘பத்தனாய்ப் பாடமாட்டேன்’‘அன்னம்பாலிக்கும்’ முதலான திருப்பதிகங்களால்பரவிப் பணிந்தார். தில்லையில் சிலநாள் தங்கித் திருவேட்களம், திருக்கழிப்பாலை முதலான தலங்களைத் தரிசித்து உழவாரப்பணி செய்து இன்புற்றார்.

சம்பந்தர் சந்திப்பு 1 :

தில்லையில் திருநாவுக்கரசர் தங்கியிருந்த பொழுது சீகாழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமையம்மை தம் திருமுலைப் பாலோடு சிவஞானங்குழைத்தூட்ட உண்டு, ‘இவர் எம்பெருமான்’ என்று கூட்டிக்காட்டி ஏழிசை இன் தமிழ்ப்பாமாலை பாடிய திருஞானசம்பந்தரின் சிறப்பினை அடியார்கள் சொல்லக் கேட்டு, அவரது திருவடிகளை வணங்குதற்குப் பேரவாக் கொண்டு சீகாழிக்குப் புறப்பட்டார். திருநாரையூர் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு சீகாழிக்கு விரைந்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வருகையைக் கேட்டு எதிர்கொண்டழைத்தார். திருநாவுக்கரசர் அன்புப்பெருக்கால் திருஞானசம்பந்தரை வணங்கினார். திருஞானசம்பந்தர் கைகளைப்பற்றிக் கொண்டுதாமும் வணங்கி ‘அப்பரே’என்று அழைக்க நாவுக்கரசரும்‘அடியேன்’ என்றார். மகிழ்ச்சியால் இருவர் உள்ளமும் இணைந்து இதயங்கலந்து திருத்தோணியப்பர் தம் திருக்கோயிலை அடைந்தனர். அருட்கடல் அன்புக்கடல், சைவநெறி பெற்ற புண்ணியக் கண்கள் இரண்டு, சிவபிரானது அருளும் அன்னை