அருளும், இவைகளின் இணைப்பை இவ்விருவர் கூட்டுறவு அன்பர்கட்கு நினைவுறுத்தியது. திருக்கோயிலுக்குள் சென்று அடியவர் இருவரும் பெருமானைப் பணிந்தெழுந்தனர். சம்பந்தர் அப்பர் பெருமானைப்பார்த்து ‘நீர் உங்கள் பெருமானைப் பாடுவீராக’ என்றார். அப்பரும் ஆனந்தம் மேலிட்டுப் “பார்கொண்டுமூடி” என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். பல நாட்கள் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரோடு உடனுறைந்து பிரியாவிடை பெற்றார். சம்பந்தரும் திருக்கோலக்கா வரை உடன்சென்று வழியனுப்பினார். அப்பர், ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு கருப்பறியலூர், புன்கூர், நீடூர், குறுக்கை முதலிய தலங்களையும் செம்பொன் பள்ளி, மயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவாவடுதுறை, திருவிடைமருதூர் முதலிய தலங்களையும் தரிசித்துக்கொண்டு திருச்சத்தி முற்றத்திற்கு எழுந்தருளினார். திருவடிதீக்ஷை: திருச்சத்திமுற்றத்துப் பெருமானாகிய சிவக்கொழுந்தீசனைப் பணிந்து ‘கோவாய்முடுகி’என்று தொடங்கி ‘கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என்தலைமேற் சூட்டியருளுக’ என்று திருவடிதீக்ஷை செய்யுமாறு வேண்டினர். சிவக்கொழுந்தீசர் ‘நல்லூருக்குவருக’ என்று அருளிச் செய்தார். அவ்வருள் வாக்குக்கேட்ட அப்பர் அடிகள் மகிழ்ந்து நன்மை பெருகும் அருள் வழியே, நல்லூரை அடைந்து பெருமானை வணங்கி எழுந்தார். ‘நினைப்பதனை முடிக்கின்றோம்’ என்று அருளி அப்பரடிகள் திருமுடிமேல் பெருமான் திருவடி சூட்டியருளினான். “நினைந்துருகும் அடியாரை” என்று தொடங்கி இறை அருளை வியந்து “நனைந்தனைய திருவடி என்றலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமான்” என்றுபாடிப் பரவி மகிழ்ந்து பலநாள் அங்குத் தங்கிச் சிவதல தரிசனங்கள் பலவும் செய்து இன்புற்றார். அப்பூதி அடிகள் : நல்லூரிலிருந்து நாவுக்கரசர் விடைகொண்டு திருப்பழனம் முதலான தலங்களைத் தரிசித்துத் திங்களூரை வந்தடைந்தார். திங்களூரில் அந்தணரில் மேம்பட்ட அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்றுசாலை, குளம், கிணறு, தண்ணீர்ப்பந்தல் முதலான தருமங்களைத் திருநாவுக்கரசர் பெயரால் அமைத்தும், புதல்வர்களுக்கு அவர் பெயரையே வைத்தும் பக்தி செய்
|