தார். இவற்றை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதிஅடிகள் திருமனையை அடைந்தார். அடியார் ஒருவர் வந்துள்ளார் என்று அப்பூதிஅடிகள் வணங்கி வரவேற்றார். திருநாவுக்கரசர் அப்பூதிஅடிகளைப் பார்த்து ‘நீர்செய்து வரும் அறப்பணிகளைக்கண்டும் கேட்டும் இங்கு வந்தோம். நீர்செய்த அறப்பணிகளில் நும்பேர் எழுதாது வேறொருபேர் எழுதிய காரணம் யாது?’என்று கேட்டார். அவ்வளவில் அப்பூதிஅடிகள் ‘திருநாவுக்கரசர் பெயரையா வேறொரு பெயர் என்றீர்! அவர் தம்பெருமையை அறியாதார் யார்? மங்கலமாம் சிவவேடத்துடன் இவ்வாறு மொழிந்தீரே நீர் யார்?’ என்று வெகுண்டு கேட்டனர். திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளாரின் அன்பின் திறம்அறிந்து ‘இறைவன் சூலைதந்து ஆட்கொள்ள அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான்’ எனப் பணிமொழிபு கன்று தம்மை அறிமுகம் செய்துகொண்டார். அவ்வுரை கேட்ட அப்பூதி அடிகள் தம் குல தெய்வமே எழுந்தருளினாரென பெருமகிழ்ச்சிகொண்டு மனைவி மக்கள் உற்றார் மற்றோர் எல்லோரையும் அழைத்துவந்து வணங்கச்செய்து தாமும்வணங்கித் தம் இல்லத்தில் திருவமுது செய்தருளும்படி வேண்டினார். அப்பர் பெருமானும் அதற்கு இசைந்தருளினார். விடந்தீர்த்தது: அறுசுவை அடிசில் தயாராயிற்று. தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக்குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். மூத்ததிருநாவுக்கரசும் தமக்கு இப்பணி கிடைத்ததே என்னும் பெருமகிழ்வோடு விரைந்துசென்று வாழைக்குருத்து அரியமுற்பட்டார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டியது. ஆனால் மூத்த திருநாவுக்கரசோ அதைப் பொருட்படுத்தாது திருவமுது படைத்தற்கு இடையூறு நேருமோ என்றஞ்சி ஓடிவந்து இலையைத் தாயார் கையில்கொடுத்துக் கீழே விழுந்தார். தந்தைதாயர் இருவரும் ‘இதனைத் திருநாவுக்கரசர் அறியின் அமுதுண்ண இசையார்’ என்று எண்ணித் தன் மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகட்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார். திருநாவுக்கரசர் திருவுளத்தில் இறைவனருளால் ஒரு தடுமாற்றம் உண்டாக, மூத்த திருநாவுக் கரசை அழையும் என்றார். அப்பூதியாரோ ‘இப்போது அவன் இங்கு உதவான்’ என்று கூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை
|