பக்கம் எண் :

277
 

குங்குலியக்கலய நாயனார் திருமடத்தில் உபசரிக்கப் பெற்றுத் தங்கி அமுதகடேசரை வணங்கி இன்புற்று ஆக்கூர் முதலிய தலங்களைப் பணிந்து திருவீழிமிழலைக்கு வந்தனர். விண்ணிழி விமானத்தில் இருக்கும் இறைவனைப் பணிந்து பரவினர். பிறகு இருவேறு திருமடங்களில் திருவீழிமிழலையில்தங்கினார்கள். அந்நாளில் மழையின்மையாலும் ஆற்றுநீர்ப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாயிற்று. இறைவன் ஞானசம்பந்தர்நாவுக்கரசர் கனவில் தோன்றி, ‘காலவேறுபாட்டால்துன்புற வேண்டாம். அடியவர்க்கு உணவளிக்கும் பொருட்டுப் படிக்காசு தருகின்றோம்’ என்று கூறி திருக்கோயிலில் மேற்கு கிழக்குப் பீடங்களில் நாள்தோறும் படிக்காசு அளித்தான். அக்காசுகளைப் பெற்று ‘சிவனடியார்கள்இருபொழுதும் எய்தி உண்க’ எனப் பறைசாற்றி அடியார்க்கு அமுதளித்தார்கள். திருநாவுக்கரசர் கைத்தொண்டு புரிவதால் அவர்க்கு வாசியில்லாக் காசும் திருஞானசம்பந்தர்க்கு வாசியுள்ள காசும் கிடைத்தன. சம்பந்தர் இறைவனைப் பாடி வாசி நீங்கப் பெற்றார். சிலகாலம் கழித்து எங்கும் மழை பெய்து வளம் பெருகியது.

மறைக்கதவம் திறப்பித்தது:

திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டஇருவரும் திருவாஞ்சியம் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருமறைக்காட்டை அடைந்து வலம் வந்து திருக்கோயிலை அடைந்தார்கள். பண்டை நாளில் வேதங்கள் இறைவனை வழிபட்டு அடைத்திருந்த திருவாயிற் கதவுகள் அந்நாள்முதல்திறக்கப்படாமலே இருந்தது. அவ்வூர் மக்கள் வேறொரு வழியே சென்று வழிபட்டு வந்தனர். இச்செய்தியை அறிந்த திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை நோக்கி ‘நாம்நேர் முகவாயில்வழியே சென்று மறைக்காட்டுறையும் பெருமானை வழிபட வேண்டும். ஆதலால் இக்கதவு திறக்கும் படிப்பதிகம் பாடியருளும்’ என்று கூறினர். ஆளுடைய பிள்ளையாரின் அருள் மொழிப்படியே அப்பரும் ‘பண்ணினேர் மொழியாள்’ என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினர். செந்தமிழ்ச் சுவையைத் துய்க்க விரும்பிக் கதவம் திறக்க காலந் தாழ்த்தான் இறைவன். நாவுக்கரசர் வருந்தி இறுதித் திருப்பாடலாக ‘இராவணனை அடர்த்த பெருமானே இரக்கம் சிறிதும் இல்லையோ’என்று பாடினர். அந்நிலையில் கதவுகள் திறந்தன. இருவரும் இறையருளை நினைந்து இன்புற்று நேர்முகவாயில் வழியே சென்று வழிபாடாற்றினர். திருக்கோயிலிலிருந்து வெளியில் வரும்போது அப்பர் பிள்ளையாரை நோக்கித் திருக்கதவம் அடைக்கப்பாடும்படி வேண்டினர். சம்பந்தரும் அவ்வாறே ‘சதுரம்மறை’ என்று தொடங்கிப் பாடிய முதல் திருப்பாடலிலேயே கதவு அடைக்கப்