பக்கம் எண் :

280
 

திருவண்ணாமலை, திருவோத்தூர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், மயிலாப்பூர், திருப்பாசூர், திருவாலங்காடு, காரிகரை முதலான தலங்களைத் தரிசித்துத் திருக்காளத்திக்கு வந்தார். கண்ணப்பர்க்கருள் செய்த காளத்திநாதனைப் பாடிப் பரவி இன்புற்றார். திருக்கயிலையங்கிரியில் இறைவனைக் காணும் பெருவிருப்பு விளைந்தது. அங்கிருந்து திருக்கயிலாய யாத்திரையை மேற்கொண்டார்.

திருக்கயிலைக் காட்சி:

வடதிசைப் பெருந்தலங்களாக வழியில் உள்ள திருப்பருப்பதம் முதலான தலங்களைத் தரிசித்துக்கொண்டு தெலுங்கு, கன்னடம், மாளுவம், இலாடதேசம், மத்தியப்பிரதேசங்களைக் கடந்து காசியை அடைந்து விசுவேசனைத் தரிசித்து இன்புற்றார். அங்கிருந்து அடியார்களை விடுத்துத் தனியே இரவுபகலாய் காடுமேடு மலை மணல்பரப்புக்களில் நடந்துசென்றார். இரவுபகலாய் நடந்துசென்றதால் நாவுக்கரசரின் திருவடிகள்பரடுவரைதேய்ந்தன. கால்களால் நடக்கலாற்றாது கைகளால்தாவிச் சென்றார். கைகளும் மணிக்கட்டு வரை தேய்ந்தன. மார்பினால் உந்திச் சென்றார். என்புகளும் தேய்ந்து முரிந்தன. எப்படியும் கயிலை நாதனைக் கண்டு இன்புற வேண்டும் என்ற வேட்கையால் புரண்டு புரண்டு சென்று உடலுறுப்புக்கள் முழுதும் தேய்ந்து ஓரிடத்தில் செயலற்றுத் தங்கிக்கிடந்தார்.

பெருமான் திருநாவுக்கரசர் இன்னும் சிலகாலம் இவ்வுலகில் தீந்தமிழ்ப் பாமாலை பாடவேண்டும் என்று திருவுளங்கொண்டு அவர் கிடந்த இடத்தின் அருகே தடாகம் ஒன்று தோற்றுவித்து தாம் ஒரு முனிவர் வேடம் பூண்டு எதிரே நின்று நோக்கினார் ‘அங்கம்சிதைய இவ்வருங்கானில் வந்தது என்கருதி’ என்று முனிவர் கேட்க, அப்பரும் இறைவனைத் திருக்கயிலையில் கண்டு தரிசித்து இன்புற வேண்டும் என்ற விருப்பத்தால் வந்ததைக் கூறினர். எழுந்தருளிய சிவபிரான் ‘திருக்கயிலைமானிடர் சென்றடைதற்கு எளிதோ? திரும்பிச் செல்லும்; இதுவே தக்கது’ என்று கூற அப்பரும், ‘என்னை ஆளும் நாயகன்கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்’ என்று உறுதி மொழிந்தார். முனிவராய்வந்த பெருமான் மறைந்து அசரீரியாய் ‘நாவினுக்கரசனே! எழுந்திரு’ என்று கூறினன். அப்பொழுதே உடல் நலம் பெற்று நாவுக்கரசர் எழுந்து பணிந்து ‘அண்ணலே கயிலையில் நின்திருக்கோலம் நண்ணி நான்தொழ நயந்தருள்புரி’ எனப் பணிந்தார். பெருமான் மீண்டும் அசரீரியாய்‘இத்தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் திருக்கயிலையில்