வீற்றிருக்கும் காட்சியைக் காண்க’ என்று கூறினன். அவ்வாறே அப்பரும் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தனர். திருவையாற்றில் உள்ள தடாகத்தில் திருநாவுக்கரசர் எழுந்தார். உலகம் வியப்பக்கரையேறி ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார். ஐயாற்றிறைவரை வணங்கப் புகுமளவில் அங்குள்ள உயிர்கள் அனைத்தும் சத்தியும் சிவமுமாம் காட்சிகளைக் காட்டின. அப்பெருங்கோயில் கயிலையங்கிரியாய்க் காட்சி அளித்தது. திருமால், பிரமன், இந்திரன் முதலானோர் போற்ற வேதம் முழங்கவிண்ணவர், சித்தர் வித்யாதரர்களுடன் மாதவர் முனிவர் போன்ற இறைவன் அம்பிகையோடு எழுந்தருளியிருக்கும்அருட்காட்சிகண்டு ஆனந்தக் கூத்தாடினார்; பாடினார்; பல்வகைப் பாமாலைகளாலும் போற்றிப் பரவிப் புகழ்ந்து மகிழ்ந்தார். பெருமான் கயிலைக் காட்சியை மறைத்தருளினான். திருநாவுக்கரசர் திகைத்து இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணித் தெளிந்து ‘மாதர்ப்பிறைக்கண்ணியானை’ என்ற திருப்பதிகம் பாடித்தொழுதார். பின்னும் பல பதிகங்கள் பாடித் திருவையாற்றில்பலநாள் தங்கி உழவாரப்பணி புரிந்து இன்புற்று இருந்தார். திருவையாற்றிலிருந்து நெய்த்தானம் மழபாடி முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருப்பூந்துருத்திக்கு வந்தார். சிலநாள் பூந்துருத்தியில் தங்கும் விருப்புக்கொண்டார். மிக உயர்ந்த திருமடம் ஒன்று நிறுவினார். அங்குத் தங்கியிருந்து பல்வகைப் பதிகங்களையும் பாடிப் பரவி வந்தார். சம்பந்தர் சந்திப்பு 3 : திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியிலிருந்தபொழுது திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சமணரை வாதில் வென்று பாண்டியனையும் மக்களையும் சைவத்தின் சிறப்புணரச்செய்து திரும்பியவர் திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியில் இருப்பதை அறிந்து அவரைக் காணும் விருப்பம்கொண்டு பூந்துருத்தியை அடைந்தார். ஞானசம்பந்தர் வருகையைக் கேட்ட நாவுக்கரசர் அவரை நேரே காணும் பெருவிருப்போடு திருஞானசம்பந்தரைச் சூழவந்த அடியார் கூட்டத்தை வணங்கி ஞானசம்பந்தர் ஏறிவரும் சிவிகையைத் தாமும் ஒருவராய்த்தாங்கிவந்தார். பூந்துருத்திக்கு அருகாக வந்ததும் சம்பந்தர் ‘அப்பர் எங்குற்றார்’ எனவினவ, அப்பரும் ‘உம் அடியேன் உமது
|