பக்கம் எண் :

285
 

திலகவதியாரைத் துதித்தல்:

திலகவதியாரே திருநாவுக்கரசரின்முதல் ஆசிரியர். திலகவதியார் திருவைந்தெழுத்தோதிக் கொடுத்ததே இவர்க்குரிய முதல் தீக்ஷையாயிற்று. திருநாவுக்கரசர் திலகவதியாரைச் சிவனருளே என்று பல இடத்தும் துதிக்கின்றார்.

“ஈன்றாளு மாய்எனக் கெந்தையு மாய்உடன் தோன்றி னராய்
மூன்றாய் உலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றான்” (தி.4. ப.94. பா.1)

“துணையா யென்னெஞ்சம்துறப்பிப்பாய் நீ”

“எம்மை யாரிலை யானும்உளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தார் ஆரூர் ஐயரே” (தி.5. ப.7பா.6)

சூலை நீங்கியது:

திருநாவுக்கரசர் சூலைநோயால் வருந்தியதும் இறையருளால் நீங்கியதும் அவர் பாடிய திருப்பதிகத்துட் குறிக்கப்பெற்றுள்ளது.

“தோற்றாதென் வயிற்றினகம்படியே குடரோடு துடக்கி
முடக்கியிட, ஆற்றேன்” (தி.4. ப.1. பா.1)

“சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்”(தி.1. ப.1. பா. 3-4)

“பிணிகாட்டி ஆட்கொண்டு பிணிதீர்த்த ஆரூரர்” (தி.4 பா.5 பா.3)

“உறுபிணியார் செறலொழிந்திட்டு ஓடிப்போனார்” (தி.6. ப.98. பா.5)

“சூலைதீர்த்தடியேனை ஆட்கொண்டாரே” (தி.6. ப.96. பா.3)

சமணராயிருந்தது:

திருவாரூர்த் திருப்பதிகத்துள் எல்லாப் பாடல்களிலும் திரு