நாவுக்கரசர் தாம் சமண் சமயம் சார்ந்து வருந்தியதைக் குறிப்பிடுகின்றார்கள். மற்றும் பல பாடல்களாலும் சமணருள் ஒரு பிரிவினரான குண்டர் குழுவிற் சேர்ந்திருந்தமையைக் குறிப்பிடுகின்றார்கள். “குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார் நகைநாணாது உழிதர்வேனை” (தி.4. பா.5. பா.4) “பல்லுரைச் சமணரோடே பலபல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன்” (தி.4. ப.39 . பா.7) “பண்ணிய சாத்திரப்பேய்கள் பறிதலைக் குண்டரைவிட்டு எண்ணில்புகழ் ஈசன்தன் அருள்பெற் றேற்கும்” (தி.4.ப.101. பா.7) “குண்டரோடு அயர்த்துநாளும் மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன்........ செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.” (தி.6.ப.91. பா.8) என்பன முதலிய பல பாடல்களாலும் தாம் சமணராயிருந்ததையும் மீண்டும் சைவராய் இறையருள் பெற்றதையும் குறிப்பிட்டுள்ளார். அரசனழைக்க மறுத்தது: சிவனுக்காட்பட்டுத் தொண்டுபூண்ட உறுதியும் வேந்தர்க்கு அஞ்சாத மனஉறுதியும் பல (ப.98)பாடல்களில் கூறப்பட்டுள்ளன. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்” “துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும் சொற்கேட்கக் கடவோமோ துரிசற்றோமே” “பாராண்டு பகடேறி வருவார்சொல்லும் பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே” “நாவலந்தீ வகத்தினுக்கும் நாதரான காவலரே ஏவிவிடுத் தாரேனும் கடவமலோம்”
|