“சிவன்என் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானேவந்து கோவாடிக் குறிறேவல்செய் கென்றாலும் குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே” நீற்றறையில் இருந்தது : திருநாவுக்கரசரைச் சமணர் நீற்றறையில் இட்டனர். அவர் இறைவன் திருவருளால் எத்தகைய துன்பமும் இன்றியிருந்தனர். அந்நீற்றறை இறைவன் திருவடி நிழல்போலக் குளிர்ந்திருந்தது. இவ்வற்புத நிகழ்ச்சியை நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிட்டுள்ளார். “சிவசம்பந்தத் திடைத்தவம் செய்து திரியும் | பத்தியிற் சிறந்தவர் | திலகன் கற்றசிட்டன் வெந்தொளிர் திகழும் | பைம்பொடித்த வண்டணி | கவசம்புக்கு வைத்து அரன்கழல் கருதும் | சித்தனிற் கவன்றிய | கரணம் கட்டுதற் கருத்துள களகம்புக்க | நற்கவந்தியன்” |
நஞ்சுகலந்தளிக்கப் பெற்றது : சமணர் நஞ்சுகலந்த பாற்சோறளித்து உண்ணச் செய்தனர் என்பது திருநாவுக்கரசர் பாடலால் தெளிவாகின்றது. “துஞ்சிருள் காலைமாலை”என்று தொடங்கும் திருப்பாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா அமணர்தந்த நஞ்சமு தாக்குவித்தார்” (தி.4. ப.70. பா.5) ‘விடம் அடையார்இட ஒள் அமுதாத்துற்றவன்’ எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்காலும இதனையறியலாம். மதயானையை ஏவப்பெற்றது : சினமிக்க மதயானையைத் திருநாவுக்கரசர்மீது சமணர் ஏவினர். நாவுக்கரசர் இறைவன் தமர் நாம்.
|