நம்பியாண்டார் நம்பிகள் ஆளுடையபிள்ளையார் திருவந்தாதியில் இதனைக் குறித்துள்ளார். “பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான் நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக் கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே” -தி.11ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி. 80 சேந்தனார் திருவீழிமிழலைத் திருவிசைப்பாவிலும் இச் செய்தியைக் கூறியுள்ளார். “பாடலங் காரப் பரிசில்கா சருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி நீடலங் காரத்தெம்பெரு மக்கள் நெஞ்சினுள் நிறைந்துநின் றானை” -தி.9 திருவிசைப்பா.57 மறைக்கதவம் திறப்பித்தது : திருமறைக்காட்டில் வேதங்கள் அடைத்த கதவைத் திருநாவுக்கரசர் “பண்ணினேர் மொழியாள்” என்று தொடங்கித் திறக்கப்பாடியதும், திருஞானசம்பந்தர் அடைக்கப் பாடியதும் வரலாறு. “கண்ணி னால் உமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே” (தி.5. ப.10.பா.1) “திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடிஅ டைப்பித் தாருந் நின்றார்” (தி.5ப.50 பா.8) “சரக்க இக்கத வம்திறப் பிம்மினே” (தி.5. ப.10. பா.11) நம்பியாண்டார் நம்பிகள் திருவந்தாதியிலும் இச்செய்தி குறிக்கப்படுகிறது. “மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால் திணியன நீள்கத வம்திறப் பித்தன” -தி.11 திருத்.திருவந்தாதி. 25 வாய்மூருக்குவா என்றழைக்கப்பெற்றது: திருமறைக்காட்டுத் திருமடத்துள் உறங்கிக்கொண்டிருந்த
|