பக்கம் எண் :

292
 

திருநாவுக்கரசரைத் திருவாய்மூருக்கு வருக என்றழைத்ததும் அங்கே காட்சி வழங்கியதும் வரலாறு.

“உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி
என்னை வாவென்று போனார்” (தி.5. ப.50. பா.2)

“எங்கேஎன்னை இருந்திடம் தேடிக் கொண்டு
அங்கே வந்தடை யாளம் அருளினார்.........
திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று
போனார்” (தி.5. ப.50. பா.1)

“தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன்
அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேன்என்றார்” (தி.5.ப.50. பா.3)

“கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்”

“ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ”

“செந்தமிழ் உறைப்புப்பாடி
அடைப்பித் தாரும் நின்றார் மறைக்கவல் லரோதம்மை”(தி.5. ப.50. பா.4, 7, 8)

“பாட அடியார் பரவக்கண்டேன்......வாய்மூர்
அடிகளை நான்கண்ட வாறே” (தி.6. ப.77. பா.1)

உண்ணா நோன்பு மேற்கொண்டது:

பழையாறை வடதளித் திருக்கோயிலுள் இருக்கும் இறைவரை ஒளித்து சமணர் தம் பாழியாகக்கொண்டிருந்தனர். திருவாக்கரசர் அங்குச் சென்றபோது மீண்டும் அக்கோயிலுள் சிவபிரானைத் தரிசித்தாலன்றி உண்பதில்லை என விரதங்கொண்டதும், அரசன் கனவில் இறைவன் தோன்றி மீண்டும் கோயில் எடுக்கச் செய்ததும், சமணர்களைஅழிக்கச் செய்ததும் வரலாறு.

“தலையெ லாம்பறிக்கும்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தால்மறைக் கொண்ணுமோ”