பக்கம் எண் :

294
 

எனவும்,

“யாதும் சுவடுபடாமல் ஐயா றடைகின்றபோது
காதல் மடப்பிடியோடும் களிறுவருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்”(தி.4. ப.3. பா.1)

“நெடுநீரில் நின்றேறநினைந்தருளி
ஆக்கினவா றடியேனை ஐயாறன்”

“நெடுநீரில் நின்றேற நினைந்தருளி
உருக்கினவா றடியேனை ஐயாறன்” (தி.4. ப.91. பா.3, 4)

எனவும் கூறிய தொடர்களால் நாம் நன்கு அறியலாம்.

திருவையாற்றில் தென்கயிலை எனவழங்குவதும், அப்பர் அடிகள் கயிலைக் காட்சி கண்ட திருவிழாக்கள் முதலிய இத்தலத்து நிகழ்தலும் அறிதற்குரியன.

திருப்புகலூரில் :

திருநாவுக்கரசர் புகலூர்ப்பெருமான் திருவடிகளையே சரணெனக் கொண்டு உழவாரத்தொண்டு செய்து திருப்பதிகங்கள் பாடித்தங்கியிருந்தார். பொறிவாயில் ஐந்தவித்த அவருடைய பற்றற்ற நிலையை இறைவன் பலவாறு வெளிப்படுத்துகின்றான்.

பெண்ணாசை, பொருளாசை இவற்றிலும் தூய்மையுடையார் என்பதை உலகம் அறிய உழவாரம் செய்யும் இடங்களில் பொன்னும் மணியும் தோன்றச்செய்தும், ஊர்வசி முதலான அரம்பையரை ஆடச்செய்தும் இவை இரண்டாலும் இவர்தம் உளஉரத்தைப் புலப்படுத்துகின்றான் இறைவன்.

“பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் ...
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே” (தி.6.ப.27. பா.1)

நம்பியாண்டார் நம்பிகள் இவ்வற்புத நிகழ்ச்சியைத் திரு ஏகாதச மாலையில் (பா.2) விவரித்துள்ளார்கள்.