இராஜராஜசோழன் II காலத்தில் திருவலஞ்சுழியிலும், குலோத்துங்கன் III காலத்தில் திருக்கச்சூரிலும், குலோத்துங்கன் III காலத்து சித்தூரிலும், இராசேந்திரன் III காலத்தில் கோயிலூரிலும், ஜடாவர்மன் வீரபாண்டியன் காலத்தில் சேரமாதேவியிலும், வீரபாண்டியன் காலத்து தீர்த்தநகரியிலும், விக்கிரம பாண்டியன் காலத்தில் திருப்புத்தூரிலும், பராக்கிரமபாண்டியன் காலத்தில் சூலமங்கலத்திலும் திருநாவுக்கரசர் திருவுருவப் பிரதிஷ்டை திருவிழாக்கள் முதலியன நிகழ்த்திய செய்தியும் நிலதானம் முதலிய வழங்கிய செய்தியும் குறிக்கப்பெற்றுள்ள. திருவீழிமிழலை, திருவதிகை, திருவான்மியூர், திருக்குறுக்கைபூதக்குடி முதலிய இடங்களில் அப்பரடிகளுக்குத் திருமடம் இருந்த செய்தி கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. திருநாவுக்கரசர் திருப்பெயரை மக்கள் பெயராகவும் திருவீதியின் பெயராகவும் அளவு கருவிகளின் பெயராகவும் வழங்கி வந்தமையும் கல்வெட்டுக்களில் காணலாம். திருத்தொண்டர் புராண சாரம் | போற்றுதிரு வாமூரில் வேளாண் டொன்மைப் | பொருவில்கொறுக் கையரதிபர்புகழ னார்பான் | | மாற்றருமன் பினிற்றிலக வதியா மாது | வந்துதித்த பின்புமரு ணீக்கியாருந் | | தோற்றியமண் சமயமுறு துயர நீங்கத் | துணைவரருள் தரவந்த சூலை நோயாற் | | பாற்றருநீ ளிடரெய்திப் பாடலிபுத் திரத்திற் | பாழியொழித் தரனதிகைப்பதியில் வந்தார். |
| வந்துதமக் கையரருளால் நீறு சாத்தி | வண்டமிழால் நோய்தீர்ந்துவாக்கின் மன்னாய் | | வெந்தபொடி விடம்வேழம் வேலை நீந்தி | வியன்சூலங் கொடியிடபம்விளங்கச் சாத்தி | | அந்தமிலப் பூதிமக னரவு மாற்றி | யருட்காசு பெற்றுமறை யடைப்புநீக்கிப் | | புந்திமகிழ்ந் தையாற்றிற் கயிலை கண்டு | பூம்புகலூ ரான்பாதம்பொருந்தி னாரே | - உமாபதிசிவாசாரியார் |
|