| 25. | ஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக் | | காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன் | | ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது | | பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன் | | கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | | 5 |
அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன். கு-ரை: பெய்வளையாள்- முற்பாக்களிற் போலக் கூறிக் கொள்க. பெய்வளை- செயப்படுபொருளில் வந்த வினைத்தொகை. துறை - ‘மதுத்திவலை சிந்து பூந்துறை’ (தி.3 ப.92 பா.8) தோளைத் தொழுவேன், குளிரத் தொழுவேன். அரை குயில் - பாடும் குயில். ஆலும் - ஒலிக்கும். ஆலல் என்பது அகலல் என்பதன் மரூஉ. மயிலுக்குத் தோகையும் குயிலுக்கு வாயும் அகலுதல் கொள்க. தி.3 ப.52 பா.1இல் யாம் எழுதிய உரையைக் காண்க. 5. பொ-ரை: இளைத்த பிறையைச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடிக் காடுகளையும் நாடுகளையும் மலைகளையும் கையால் தொழுதுகொண்டு ஆடி மகிழ்ந்து வரும் அடியேன் எம்பெருமான் கூத்தாடுதலை விரும்பித் தங்கியிருக்கும் ஐயாற்றை அடையும்போது ஆண் மயில் பெடைமயிலொடும் கலக்க இரண்டும் இணையாய் ஒன்றொடொன்று கூடி வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன். கு-ரை: ஏடு -இளைது. (சிந்தாமணி 446, 1552 பார்க்க). இளைது - இளது - ஈள்து - எள்து - ஏடு என மருவிற்று, இன்றேல், நச்சினார்க்கினியர்‘ஏட்டைப்பட்டு’ என்பதற்கு ‘இளைத்து’ என்றுரையார். காடு, நாடு, மலை எல்லாம் சிவமயம். ‘மண்ணாகி விண்ணாகி மலையுமாகி’ (தி.6 ப.94 பா.2).‘ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு’ ‘பாடல் வீணைமுழவம் குழல் மொந்தை பண்ணாகவே ஆடுமாறு வல்லானும் ஐயாருடைய ஐயனே’ (தி.2 ப.6 பா.1) எனக் காழிவேந்தர் அருளியதும் உணர்க.
|